உலக தமிழர்கள் வணிக மாநாடு 2025  தமிழர் ஒருமித்து, உலகை வெல்வோம்

World Tamils Business Conference 2025 -

உலக தமிழர்கள் வணிக மாநாடு 2025  தமிழர் ஒருமித்து, உலகை வெல்வோம்
உலக தமிழர்கள் வணிக மாநாடு 2025  தமிழர் ஒருமித்து, உலகை வெல்வோம்

date :07 July 2025 Time : 3.30pm News by: Ganapathy

 

மலேசியா கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக 120க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் சிறப்பாக நடைபெற்றது தலைமை ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ குபேர குருஜி Dr.Star Anand ram  வரவேற்பு உரையுடன் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வில்15க்கும்
மேற்பட்ட நாடுகளில் இருக்கும் வியாபார வெற்றி தமிழர்கள் ஒன்றிணைந்து உலக அளவில் தமிழர்களின் வியாபார முன்னேற்றத்திற்கான பல்வேறு விதமான தொழில் யுத்திகள் பற்றி கலந்துரையாடல்ள் வியாபாரத்திற்கான தன்னம்பிக்கை ரகசியங்களை பல்வேறு துறையில் இருக்கும்
மலேசிய முக்கியஸ்தர்கள் வந்து பகிர்ந்து கொண்டனர். 

இந்த நிகழ்வின் மூலமாக பல தொழிலதிபர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் முதலீட்டுகளுக்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 12 நிறுவனங்களுக்கு இடையே செயல்படுத்தப்பட்டது

10 மில்லியன் முதல் கட்ட வர்த்தகமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது 

நிகழ்வின் முக்கிய அங்கமாக தமிழ் தாய்க்கான திருவுருவச் சிலையை மலேசியாவில் வைப்பதற்கான முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக சக்ரா பவுண்டேஷன் தயாரிப்பாளர் சக்ரா ராஜசேகர் அவர்களும் கலந்து கொண்டார். 

 லயன்ஸ் கிளப் Lions Club of Kuala Lumpur North - Lion Dr.Calvin & Focus point malaysia உடனினைந்து கண் பார்வைகளுக்கான ஒரு மருத்துவ நிதியையும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ குபேர குருஜி Dr.Star Anand ram  முன்னிருந்து இந்த நிகழ்வை வழி நடத்தினார்.

 

தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பல உலக நாடுகளுக்கு பயணம் செய்து அங்கு இருக்கக்கூடிய தமிழர்களுடன் பல்வேறு விதமான தொழிற்சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சிகளையும் எடுத்து இருக்கின்றனர். 

இந்த நிகழ்வின் அடுத்த கட்ட செயல்பாடுகளைப் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ள கீழ் உள்ள whatsapp நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

மலேசியா தமிழ் இணையத்தளம் மைவெளிச்சம்.கோம் நிறுவனர் கணபதி கிருஷ்ணசாமி அவர்கள் 15 ஆண்டுகாலம் பல நாடுகளுக்கிடையில் இணையச்சேவையை  கல்வி  பொருளாதாரம் மேம்பாடு  வளர்சி பற்றி மாநாட்டில் பேசினார்.