முன்னாள் மகளிர் ரீயூனியன் அணிக்கு 15,000.00 ரிங்கிட் அன்பளிப்பு..
An amount of 15,000.00 Ringgit was donated to the former women's

Date ;08 July 2025 Time :12.30 News By:Sameer
அன்மையில் ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் சந்திப்பு கூட்டம் தேனீர் விருந்துடன் ம.இ.கா வில் சேவை ஆற்றிய மகளிர் பிரிவு பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்தக்கொண்டு சிறப்பித்தனர் . முன்னாள் மகளிர் அணி திருமதி நாகேஸ்வரி தனபாலன் தமதுரையில் ரீயூனியன் 11 மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள முன்னாள் மகளிர் அணி குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அவர்கள் கட்சிக்கு முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் செய்த பணிகளை தற்கால மகளிர் அணியினர்
அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அது தனக்கு சரியாகப்பட்டதால் மீண்டும் ஒன்று கூடும் முயற்சியில் இறங்கி இந்த உருவாக்கி முதல் கூட்டம் கூட்டிவிட்டதாக திருமதி நாகேஷ்வரி தனபாலன் அவர்கள் கூறினார்கள்
.
தமது உரையில் இதற்காக முயற்சித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்
இதேபோல பிற மாநிலங்களிலும் கூட்டங்கள் நடத்த இருப்பதாக கூறினார் . அதுமட்டுமல்ல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புமாறு கேட்டு கொண்டார்
இதனை தொடர்ந்து ம இ காவின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள் இந்த நிர்வாகக் குழுவிற்கு RM 15,000.00 ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாக கூறினார் . மேடையில் ரொக்கமாக திருமதி நாகேஸ்வரி தனபாலன் தலைவியிடம் அந்தத் தொகையை வழங்கினார்.