பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்

A shooting at a Brickfields restaurant in Kuala Lumpur has left one man dead and two of his friends injured.

பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, இருவர் காயம்

Dated: 14.6.2025   Time: 11. 40pm  By: Punithai Chandran

நேற்று இரவு பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தானில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது நண்பர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக  பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூட் தெரிவித்தார்.

நேற்றிரவு 10.50 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்கள், நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களை பலமுறை சுட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், மற்ற இருவர் பாதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயங்களும், மற்றவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆய்வு, சம்பவத்திற்கான நோக்கம் மற்றும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண்பது ​தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நன்றி. எஃப்எம்டி