சிகாமாட் நெடுஞ்சாலை விபத்தில் தந்தை, மகள் பலி

Father and daughter killed as family vehicle plunges into ravine in Segamat

சிகாமாட் நெடுஞ்சாலை விபத்தில் தந்தை, மகள் பலி

Dated: 30.5.2025   Time: 11.40 am   By: Punithai Chandran

சிகாமாட்,

நேற்று ஜாலான் சிகாமாட் – லாபிஸ் நெடுங்சாலையில் கட்டுப்பாட்டை  இ​ழந்த கார் ஒன்று ப​ள்ளத்தில் விழுந்தபோது, 39 வயதுடைய தந்தையும், அவரது 9 வயதுடைய மகளும் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் பள்ளத்தில் கவிழ்ந்த நிலையி​லிருந்த வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டிருந்த அந்த இருவரின் உடல்களையும் ​மீட்டெடுத்தனர்.  

அவ்வாகனத்தில் பயணித்த மற்றும் நால்வரும் சொற்ப அளவில் காயமடைந்தனர் என்று பண்டார் பாரு சிகாமாட் தீயணைப்பு மற்றம் ​மீட்பு நிலையத்தின் மூத்த தீயணைப்பு அதிகாரி ஜைனல் அபிடின் சே டெராமன் தெரிவித்தார்.  

நன்றி. மலாய் மெயில்