அரசு எதிர்நோக்கும் குறைந்த மற்றும் செல்வ வருவாய் பிரிவினரின் வரி சீர்திருத்தச் சவால்கள்

Malaysia is undertaking fiscal reforms, including expanding the Sales and Service Tax (SST) and rationalizing electricity and diesel subsidies, to strengthen public finances.

அரசு எதிர்நோக்கும் குறைந்த  மற்றும் செல்வ வருவாய் பிரிவினரின் வரி சீர்திருத்தச் சவால்கள்

Dated: 18.6.2025   Time: 4.30 pm  By: Punithai Chandran

பெட்டாலிங் ஜெயா

விற்பனை மற்றும் சேவை வரி (SST) மற்றும் மின்சாரம் மற்றும் டீசல் மானியங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிதி சீர்திருத்த முயற்சிகள், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் முக்கிய பொருளாதார துறைகளைப் பாதுகாக்கும் என்பதுடன், பொது நிதியையும் வலுப்படுத்தும் என்று கருவூலத் தலைமைச் செயலாளர் ஜோஹான் மஹ்முட் மெரிகன் தெரிவித்துள்ளார்.

அண்மைய SST விரிவாக்கமானது, அத்தியாவசிய தினசரி பொருட்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மலேசியாவின் வரி-GDP விகிதம், சுமார் 12.5% சதவிகிதமாக உள்ளது. இது இந்த வட்டாரத்திலேயே மிகக் குறைவானதாகும்,

நிலையான செலவினங்களை உறுதிச் செய்வதற்கும், சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புக்களை பூர்த்திச் செய்வதற்கும், நாட்டின் வரித் தளத்தை விரிவுபடுத்துவது அவசியமாகும் என்றார்.

உயர் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் இருவருக்கும் ஒரே மாதிரியான உதவிகளை வழங்குவது, சமத்துவத்தை குறைவான மதிப்பிற்கு உட்படுத்துகிறது. குறிப்பாக, ஒரு செல்வ வரியை வ​சூலித்து நிர்வகிப்பது, வருமான வரியை விட மிகவும் சவாலானதாகும். இது மலேசியா எதிர்நோக்கும் உண்மையான சவால் என்று ஜோஹான்   கூ​றினார்.

நன்றி. எஃப்எம்டி