ECRL ரயில் வேலைக்கு 1,800 தொழிலாளர்கள் தேவை

ECRL requires 1,800 workers for rail work

ECRL ரயில் வேலைக்கு 1,800 தொழிலாளர்கள் தேவை
ECRL ரயில் வேலைக்கு 1,800 தொழிலாளர்கள் தேவை

Date :08 May 2025 News By:PunithaiChandran 


ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்பு (ECRL) 2027 ஜனவரியில் தொடங்கும்போது, சுமார் 1,800 தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். 
50.3 பில்லியன் ரிங்கிட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில், சுமார் 80% சதவிகித ஊழியர்கள் மலேசியர்களாக இருக்க வேண்டும் என்ற தேவையை நிர்ணயித்துள்ளாகவும், மற்றும் புதிய தொழிலாளர்கள் பல்வேறு திறன்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் இக்கட்டுமான வேலை வாய்ப்புக்கள் முன்முயற்சியைத் தொடங்கி வைத்தபோது அமைச்சர் கூறினார்.

 
கடந்த ஆண்டுகளில் மொத்தம் 3,200 பேருக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இப்போது தொடக்கமாக பல்வேறு பின்னணியைச் சேர்ந்த 210 மலேசியர்கள் இந்த ஆண்டு சீனாவின் லியூசோவுக்கு ஒரு வருட தீவிரப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர், இத்திட்டம் நாட்டின் மேம்பாட்டிற்கு மேலும் ஒரு மைல் கல் ஆகும் என்றார்.

Thanks- Malaymail  

www.myvelicham.com Face book