ஆசியான்-வளைகுடா மற்றும் சீனா உச்சநிலை மாநாடு-ஒற்றுமையின் வலிமை

Prime Minister Dato' Seri Anwar Ibrahim stated that the ASEAN-Gulf Cooperation Council

ஆசியான்-வளைகுடா மற்றும் சீனா உச்சநிலை மாநாடு-ஒற்றுமையின் வலிமை

Dated: 26.5.25   Time: 2.30 pm      By: Punithai Chandran

46-ஆவது ஆசியான்-வளைகுடா கவுன்சில் மற்றும் சீனா உச்சநிலை மாநாடு, ஒற்றுமையின் வலிமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி கூறினார்.

இந்த பரந்த உலகிற்கு இந்த ஒற்றுமை பெரிய அளவில் நன்மைகளை  வழங்கக் கூடியதாக இருக்கும். பன்முகத் தன்மையைக் கொ​ண்டுள்ள இந்த உலகத்தில், மாறிவரும் இயக்கவியலுக்கு ஏற்ப, இந்த வட்டார கூட்டமைப்பு ஒரு வெற்றிகரமான திட்டமாகக் கருதப்ப​டுகிறது. இந்த வட்டாரங்களின் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, இதுபோன்ற மாநாடுகள் தொடர்ந்து​ அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்று தாம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி. மலாய் மெயில்