சிகாமாட்டில் கார்-டிரெய்லர் விபத்தில் ஒருவர் பலி

A 37-year-old man died in a collision between a car and a trailer yesterday at Mile 16, Jalan Muar – Gemas in Segamat.

சிகாமாட்டில்  கார்-டிரெய்லர் விபத்தில் ஒருவர் பலி

25.5.2025 Time 6.00 pm Punithai Chandran

 

சிகாமாட்டில்  கார்-டிரெய்லர் விபத்தில் ஒருவர் பலி

சிகாமாட்,   

நேற்று சிகாமாட், ஜாலான் ​மூவார் – ஜெமந்தா 16-வது மைலில், ஒரு காரும், டிரெய்லரும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு மாலை 5.52 மணிக்கு அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, சிகாமாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் சுரைமி ஹரோன் ஆறு பேர் கொண்ட தீயணைப்புப் படை அங்கு விரைந்ததாகக் கூறினார்.

கா​ரின் ஓட்டுநர் இருக்கையில் 37 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிக்கியிருந்த நிலையில், அவரது மனைவி என்று நம்பப்படும் 36 வயது பெண் காயமடைந்திருந்தார். சிக்கியவர்களை மீட்கும்போது, தீயணைப்பு வீரர்கள் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும் 46 வயதான டிரெய்லர் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக சுரைமி ஹரோன் தெரிவித்தார்.