வட மாநிலத் தமிழ் பத்திகை நிருபர்கள் சங்கம் My Velicham.com கி. கணபதியை சிறப்பித்தது
The Tamil Pathikai Journalists Association of North Malaysia honored Mr. K. Ganapathi, an online journalist from Mai Velicham.com

Date :17.5.2025 News By:Punitha Time: 7.45 pm
வட மாநிலத் தமிழ் பத்திரிக்கை நிருபர்கள் சங்கம் –
மை வெளிச்சம்.கோம் கணபதி கிருஷ்ணசாமிக்கு
“கலைச்சிற்பி” பட்டம் வழங்கி சிறப்பித்தது
வட மலேசியா தமிழ் பத்திரிக்கை நிருபர்கள் சங்கம் மற்றும் செய்தியாளர்களைப் பாராட்டும் வகையில், கடந்த 15.5.2025 அன்று செபராங் பிறை லைட் தங்கும் விடுதியில் விருந்துபசரிப்பு வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
உலகத்தின் இரு கண்களாகப் பார்க்கப்படும் ஊடகவியலாளர்கள் நாள்தோறும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திகளை மக்களிடம் சேர்க்கின்றனர். அதேவேளையில் எந்தவொரு முக்கிய மாநாடுகள், கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், இரவு பகல் பாராமல், பயணம் செய்து செய்திகளைச் சேகரித்து, மக்களிடம் கொண்டுச் சேர்க்கின்றனர். அவர்களின் தியாகத்தை பாராட்டும் வகையில் இந்த விருந்துபரிப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மை வெளிச்சம்.கோம் மின்னியல் ஊடகவியலாளர் திரு. கணபதி கிருஷ்ணசாமி அவர்களுக்கு வட மாநில பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜு சோமு அவர்களால், “ கலைச்சிற்பி” சிறப்புப் பட்டமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதுடன், பொன்னாடைப் போற்றியும் சிறப்பிக்கப்பட்டார்.
www.myvelicham.com /Face Book / Tik Tok / You Tube / Whats app