வெளிநாட்டு ஓட்டுநர் உரிம மாற்றம் மே 19 முதல் நிறுத்தம்
According to the Malaysian Road Transport Department, the conversion of foreign driving licenses to Malaysian licenses will no longer be allowed starting May 19, 2025. This decision aims to enhance road safety standards. Certain categories such as diplomats and MM2H visa holders are exempted from this rule.

Dated: 18.5.2025 Time: 4.50 By Punithai Chandran
பெட்டலிங் ஜெயா, வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் மாற்றம் மே 19 தேதி முதல் நிறுத்தம் –
சாலை போக்குவரத்துத் துறை அறிவிப்பு
மே 19, 2025 முதல் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை, மலேசிய ஓட்டுநர் உரிமங்களாக மாற்றும் விண்ணப்பங்களை நிறுத்தப்படுகிறது என்று சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
நாளை திங்கட்கிழமை முதல், மலேசிய ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், அனைத்து மலேசியர்களும் கடைப்பிடிக்கும் தேவையான செயல்முறைகளை பூர்த்திச் செய்யப்பட வேண்டும். இந்நடவடிக்கை மலேசியச் சாலைகளில் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அம்சத்தை கடைப்பிடிப்பதற்கும், மேம்படுத்தவதற்கும் எடுக்கப்பட்டுள்ளது.
12 மாதங்களுக்கும் குறைவாக மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், அவர்களின் சொந்த நாடுகள் 1949 மற்றும் 1968ஆம் ஆண்டு சட்டத்தின்படி, போக்குவரத்து மாநாட்டில் கையெத்திட்டுள்ள, அவர்களின் சொந்த நாட்டின் அதிகாரியால் வழங்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் அனுமதியைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே, மலேசியாவில் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
அதேவேளை, தூதரக அதிகாரிகள், மலேசியா எனது இரண்டாவது (MM2H) வீடு என்ற தகுதியைக் கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு உரிமங்களை வைத்திருக்கும் மலேசியர்கள் ஆகியோருக்கு இந்த விதி பொருந்தாது.
www.myvelicham.com நன்றி. எம்.எம்.டி.