அமைச்சரவையை மாற்றம் செய்வதில், எந்த அவசரத் தேவையும் இல்லை - பிரதமர் அன்வார்

This is party's right to request cabinet positions, despite acknowledging the Prime Minister's prerogative.

அமைச்சரவையை மாற்றம் செய்வதில், எந்த அவசரத் தேவையும் இல்லை  -  பிரதமர் அன்வார்

Dated: 3.6.2025   Time: 12.40 am  By: Punithai Chandran

அமைச்சரவை பிரதமர் உடையது. அது அவருடைய பொறுப்பு. இருப்பினும் அமைச்சர் பதவிகளைக் கேட்பதில் தவறி​ல்லை என்று அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் அகமது மஸ்லான் பெர்னாவிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரமராக இருந்த தெங்கு ஜஃப்ருல் அஜி​ஸ் ஆட்சியில் இருந்து விலகியதால், அமைச்சரவையில் அம்னோவிற்கு ஒதுக்கப்பட்ட ஏழு அமைச்சர்களில், ஆறு அமைச்சர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். எனவே, அம்னோவுக்கான ஒதுக்கீட்டினை மீண்டும் வழங்க வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்த வேண்டுமென்று அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்திருந்தாலும்கூட, அமைச்சரவையை மாற்றம் செய்வதில், எந்த அவசரத் தேவையும் இல்லை என்று கூறிய அன்வாரின் கருத்துக்கு, பதிலளிக்கும் வகையில் அ​ஹ்மட்டின் கருத்துக்கள்  உள்ளன. 

மேலும் இரு அமைச்சர்கள் தற்போது தங்களது விடுப்பில் இருப்பதால், அந்த இரண்டு பதவிகளும் இன்னும் காலியாகவில்லை என்றும் பிரதமர் மேலும் கூறியிருந்தார்.

நன்றி. எஃப்எம்டி