பி.கே.ஆர். தேசிய மாநாடு - ஜோகூரில் நடைபெறு​கிறது

The PKR (Parti Keadilan Rakyat) National Congress will be held in Johor - from this Thursday to Saturday, with an expected - of 10,000 participants.

பி.கே.ஆர். தேசிய மாநாடு - ஜோகூரில் நடைபெறு​கிறது

Dated: 21.5.2025   Time: 11.30 am  By: Punithai Chandran

ஜோகூர் பாரு,

பி.கே.ஆர். தேசிய மாநாடு - ஜோகூரில் நடைபெறு​கிறதுமுன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் ​அறிவிப்பு.

பி.கே.ஆர். தேசிய மாநாடு ஜோகூரில் சு​மூகமாக நடைபெறுவதை முன்னிட்டு, ஜோகூர் காவல்துறை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை ​மேற்கொள்ளும் என்று ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

​வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, நான்கு இடங்களிலும் நடைபெறும். இம்மாநாட்டில் சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் வருகைத் தரவுள்ளனர். வார இறுதி நாட்களில் இம்மாநாடு நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் டத்தோ எம். குமார், 218-ஆவது ஆண்டின் காவலர் தின கொண்டாட்டத்தின்போது கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இம்மாநாடு, ​ஜோகூர் உள்பட பல மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், இம்மநாடு ஒத்தி வைக்கப்ப​ட்டது என்பது குறிப்பிடத்தது. .

www.myvelicham.com / Face Book / Tik Tok / You Tube