ராபிட் பஸ் பினாங்கு சேவை , தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும்

Rapid Penang is expanding its van-based on-demand service to an additional 7 regions.

ராபிட் பஸ் பினாங்கு சேவை , தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும்

Date: 31.5.2025      Time: 4.00 pm        By: Punithai Chandran 

Rapid தனது சேவையை விரிவுப்படுத்துவதாக முன்னர் அறிவித்திருந்தது.  வேன் அடிப்படையிலான  சேவை, மேலும் 7 வட்டாரங்களுக்கு விரிவாக்கப்படவுள்ளது என்று பிரசரானா மலேசிய குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீர் ஹம்டன் கூறினார்.  உள்​ளூர் தேவை, அதிக மக்கள் கொண்டுள்ளப் பகுதி மற்றும் தற்போதுள்ள பேருந்து வழித்தடச் சேவைகளுடன் இவை இணைக்கப்படவுள்ளன என்றார். தற்போது 6 வட்டாரங்களில் 31 வேன்களில் தினசரி 1,828 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

இந்த ​விரிவாக்கத்தில் முதலாவதாக, அல்மா மண்டலத்தில் நான்கு வேன்கள் அதாவது, 708 புக்கிட் மெர்தாஜாம்–ஜுஞ்சங், 801 பெனாங் சென்ட்ரல்–நிபோங் திபால் மற்றும் 802 புக்கிட் மெர்தாஜாம்–நிபோங் திபால் போன்ற தற்போதுள்ள பேருந்து வழித்தடங்களுடன் பயணிகளை இணைக்கும்.

புக்கிட் மெர்தாஜாம் நகரத்தில் இருந்து, 3 வேன்கள் செபராங் பிறை தெங்கா (SPT)  நகர மையம் முதல், கடைசி பேருந்து நிலையம் வரை செல்லும்.  606 புக்கிட் மெர்தாஜாம் –கெப்பாலா பத்தாஸ் வரையிலும், 701 புக்கிட் மெர்தாஜாம் –பெனாங் சென்ட்ரல் வரையிலும், 702  புக்கிட் மெர்தாஜாம்–பெனாங் சென்ட்ரல் வரையிலும், 707 புக்கிட் மெர்தாஜாம்–தாமான் பெலாங்கி வரையிலும்,  புக்கிட் மெர்தாஜாம்–ஜுஞ்சங் வரையிலும், 709 பெனாங் சென்ட்ரல்–மாச்சாங் புபு வரையிலும், 802 புக்கிட் மெர்தாஜாம்–நிபோங் திபால் வரையிலும் மற்றும் CT14 புக்கிட் மெர்தாஜாம்–கோம்தார் வரையுள்ள வழித்தடங்களை இணைக்கும் என்று கூறினார்.

இதற்கிடையில், பாயான் பாரு மண்டலத்தில் 3 வேன்கள் இயக்கப்படவுள்ளன. 301 வெல்ட் குவே-ரெலாவ், 302 வெல்ட் குவே–பத்து மாவுங், 303 வெல்ட் குவே–புக்கிட் கெடுங், 304 குர்னி ப்ரோமனேட்–புக்கிட் கெடுங், 306 மருத்துவமனை–பெனாங் சர்வதேச விமான நிலையம், 308 சுங்கை நிபோங்–கெர்டாக் சங்குல், 401 வெல்ட் குவே தெலுக் கும்பார், 401E வெல்ட் குவே–பாலிக் பூலாவ் மற்றும் CT13 பயான் பாரு–செபெராங் ஜெயா உள்ளிட்ட, தற்போதுள்ள பேருந்து சேவைகளுடன் இணைக்கப்படும்.

இதேபோன்று, பெர்டாம் பகுதியில் 2 வேன்கள் செயல்படவுள்ளன. 601 பெனாங் சென்ட்ரல்–கெப்பாலா பத்தாஸ், 606 புக்கிட் மெர்தாஜாம்–கெப்பாலா பத்தாஸ் மற்றும் 610 கெப்பாலா பத்தாஸ்–டாசிக் குளுக்கோர் ஆகிய வழித்தடங்களை இணைத்து, பயணிகளின் காத்திருக்கும் நேரத்தையும் குறைக்கவுள்ளது.

பாலிக் புலாவ் மண்டலத்தில் இரண்டு வேன்கள் தொடக்க​ முனையிலிருந்து, கடைசி பேருந்து நிலையம் வரைச் செல்லும். இது 401E பாலிக் புலாவ்–வெல்ட் குவே, 403 பாலிக் பூலாவ்–பூலாவ் பெடோங், 404 பாலிக் பூலாவ்–பந்தாய் ஆச்சே மற்றும் 502 ஜெண்டிங் டவுன், பாலிக் புலாவ்–வெல்ட் குவே ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிப் பயணிக்கும்.

இறுதியாக, டிரான்ஸ்கிரியான் எனும் நிபோங் திபால் பகுதிகளில் இரண்டு வேன்கள் குறிப்பாக டிரான்ஸ்கிரியான் பகுதியில் இயக்கப்பட்டு, நிலையத்துடன் ராபிட் பினாங்கு பேருந்து   தொகுதியை  இணைக்கும் சேவையைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் பத்து காவான் மண்டலத்திற்கு மூன்று வேன்கள் விடப்படவுள்ளது.

இந்தச் சேவைகள் அனைத்தும் தேவையானதா அல்லது பொருத்தமானதா என்பதனை ​மூன்று மாத சோதனை காலம் முழுவதும் ராபிட் பஸ் கண்காணிக்கும் என்றும், பயணிகளின் கருத்துக்களை அறியும் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

நன்றி. பெர்னாமா