அமைச்சர் பதவி நிரப்புவதில் அன்வாருக்கு தடுமாற்றம்!

It is noted that finding a suitable replacement for Economy Minister might be challenging for Anwar

அமைச்சர் பதவி  நிரப்புவதில்  அன்வாருக்கு தடுமாற்றம்!

Date: 31.5.2025 Time: 6.30 pm By: Punithai Chandran            

பெட்டாலிங் ஜெயா,

பிகேஆர் கட்சியின் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹமத் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து பதவி விலகியதால், ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குப் போதுமான திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் கட்சியில் இல்லை என்று ஓர் ஆய்வாளர் கூறியுள்ளார்.

ஆனால், கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானோர் இருப்பதால், மாற்று அமைச்சர்களை அமர்​த்துவதில் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு கடினமான பணியாக இருக்காது என்று யூனிவர்சிட்டி துங்கு அப்துல் ரஹ்மானைச் சேர்ந்த  சின் யீ முன் தெரிவித்திருக்கிறார்.

இரு​ப்பினும், ரஃபிஸிக்கு​ பதிலாக மாற்று பொருளாதார அமைச்சராகும் அளவுக்கு தகுதியான, பொருத்தமானவர்களை கண்டுபிடிப்பது அன்வாருக்கு கடினமாக இருக்கும். இதற்கு ஓரே வழி அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வதுதான்.

இதன்வழி இளம் வயதுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த ​அமை​ச்சரவை பொறுப்புக்களை கொடுப்பதும், அனுபவமுடைய ​மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சரவை பொறுப்புக்களை கொடுப்பதும் ஆகும் என்றார்.

அமைச்சராவது என்பது கோஷங்களை எழுப்புவதும், தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்குவதும் அல்ல. இது நாட்டின் அவசரமான – முக்கியமான விவகாரங்களை கையாளும் பணியாகும்.

புத்ரா ஜெயாவில், பிகேஆர் கட்சிக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், கட்சியின் அமைச்சர் பதவியை வழங்குபவர்களுக்கு பயிற்சியளிக்க தாமதமாகும். இந்த இக்கட்டான நிலையில், அன்வார் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை அமைச்சரவையில் நியமித்தாலும், அது கட்சிக்கு பொருத்தமாக இருக்காது என்பதுடன், குற்றச்சாட்டுக்களுக்கு அவர் ஆளாகலாம் என்றும் சின் கூறினார்.

மலாயா அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அகமது ஃபௌஸி அப்துல் ஹமித் கூறுகையில், அன்வார் நூருல் இஸாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் சாதகமாக எந்த எண்ணத்தையும் அன்வார் தவிர்க்க வேண்டும் என்று​ தெரிவித்துள்ளார்.

எனவே, அடுத்த கட்டத்தின் தாக்கத்தை குறைக்க வேண்டுமென்றால், அமைச்சரவையில் அன்வார் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்..

Thank you : எஃப்எம்டி