கைரி ஜமாலுடின் அமைச்சரவை ஊகங்களை நிராகரித்தார்
Khairy Jamaluddin has dismissed media speculation that he might join Prime Minister Anwar Ibrahim's cabinet.

Dated: 5.6.2025 Time: 3.15 pm By: Punithai Chandran
தாம் தற்போது ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருவதாலும், இந்த வாழ்க்கையை விட்டு விலகத் தனக்கு எந்தவிதக் காரணமும் இல்லை என்றும் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் தாம் இணையக் கூடும் என்ற ஊடகங்களை நிராகரிக்கும் வகையில் இன்று ஒரு தயாரிப்பு வெளியீட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து, கைரியின் அமைச்சரவை நியமனம் குறித்த பல ஊகங்கள் எழுந்தன.
தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்து தாம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி. எஃஎம்டி