மருத்துவமனைகளில் கட்டண உயர்வு நோயாளிகள் சுமை
New healthcare billing rules in Malaysia require private hospitals to itemize consultation, treatment, and medication charges separately. This change could result in a 30% increase in total medical fees

Dated: 23.5.2025 Time: 12.00 By: Punithai Chandran
புதிய விதிமுறைகளால் தனியார் மருத்துவமனைகளில் கட்டண உயர்வு நோயாளிகள் சுமை அதிகரிக்கலாம்
தனியார் மருத்துவமனை கட்டணங்கள் புதிய விலை நிர்ணயித்தின் கீழ், 30% சதவிகிதம் உயரக்கூடும் என்று தனியார் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டணங்களை ஒரே கட்டணமாக வசூலித்த முறை மாறி, இப்போது ஒவ்வொரு கட்டணத்தையும் தனித்தனியாக பட்டியலிட வேண்டும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அதிகச் செலவை சுமக்க நேரிடும் என்று மலேசிய தனியார் மருத்துவ நிபுணர்கள் (FPMPAM) சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
FPMPAM-இன் தலைவர் டாக்டர் சண்முகநாதன் டி.பி கணசேன் கூறுகையில் மருந்துகளின் விலைகளை காட்சிக்கு வைக்கும் புதிய விதி, தற்போதைய பில்லிங் முறையை சீர்குலைத்துள்ளது என்றார்.
இதற்கு முன்பதாக, மருத்துவர் ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் ஆகியவற்றுக்கு ஒரே கட்டணமாக வசூலிக்கப்பட்டன.
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மேற்கொண்ட செயற்பாட்டுச் செலவுகள் உட்பட, செலவுகளைப் பிரிக்க வேண்டும் என்றும், அவற்றினைத் தனித்தனியாக பில்லில் பட்டியலிடப்பட வேண்டும் என்பது எல்லாம், சில்லறை விற்பனையில் வழங்கப்படுவதுபோல் உள்ளதால், இந்த முறையை தனியார் மருத்துவ அமைப்பு மனநிறைவை கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்துகளின் விலைகளைக் காட்ட வேண்டும் என்ற விதி முறையானது, இலாப எதிர்ப்புச் சட்டம் 2011(சட்டம் 723)-இன் கீழ் அமல்படுத்தப்பட்டதிலும் மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.myvelicham.com / Face book / Tik Tok / You tube