வெளிநாட்டவருக்கான சுகாதார வரி- தனியார் மருத்துவமனைகள் கால அவகாசம் கோருகின்றன

Private hospitals in Malaysia are calling on the Finance Ministry to postpone the July 1 implementation of the 6% Sales and Service Tax

வெளிநாட்டவருக்கான சுகாதார வரி- தனியார் மருத்துவமனைகள் கால அவகாசம் கோருகின்றன

Dated: 11.6.2025   Time: 12.55 pm   By: Punithai Chandran

கோலாலம்பூர்,

தனியார் மருத்துவமனைகள், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தனியார் சுகாதார சேவைகளுக்கான 6% சதவிகித சேவை வரி (SST) அமலாக்கத்தை ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு நிதி அமைச்சகத்தை வலியுறுத்தி வருகின்றன.

தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்வாக அமைப்புகள், பில்லிங் நடைமுறைகள் மற்றும் தேவையான இணக்க நடைமுறைகளை சரி செய்வாற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படுவதாக தனியார் மருத்துவமனைகள் சங்கமான APHM தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது அடுத்த ஆண்டு 51.7 பில்லியன் ரிங்கிட் SST வருவாயை ஈட்ட உதவும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது. இது ஒரு சுமூகமான மாற்றத்திற்கு இடமளிக்கும் என்றும்,  நோயாளி சேவைகளில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் என்றும் அமைச்சகம் ​கூறியுள்ளது.

வாடகை, குத்தகை, கட்டுமானம், நிதி சேவைகள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய சேவை வரிகள்  விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்ததைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள் இந்தக் கவலையைத் தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, சேவைகளை நாடும் பல சங்கங்கள்,  விலை நிர்ணய வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகளில் தயார் நிலை ஆகியவற்றிலுள்ள சாத்தியமான தாக்க.ங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு சேவை செய்யும் சுகாதார மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கு இது பொருந்தும்.

நன்றி எ​ஃப்எம்டிTop of Form