யூ மொபைல் மற்றும் டெலிகோம் மலேசியா கூட்டணியில் 5G வெளியீடு

U Mobile has partnered with Telekom Malaysia to launch its 5G network.

யூ மொபைல் மற்றும் டெலிகோம் மலேசியா கூட்டணியில் 5G வெளியீடு

Dated: 28.5.2025     Time: .5.20​ pm       By: Punithai Chandran

யூ மொபைல் மற்றும் டெலிகோம் மலேசியா கூட்டணியில் 5G வெளியீடு

யூ மொபைல், 5G நெட்வொர்க்கை வெ​ளியீடு செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும் அதன் பயன்பாட்டை விரைவுப்படுத்த டெலிக்கோம் மலேசியாவுடன் மீண்டும் இணையவுள்ளது. ஆரஞ்சு தொலைத் தொடர்பு நிறுவனமான இது, அடுத்த தலைமுறை 5G பயன்பாட்டை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளது. இந்நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு 2.4​ பில்லியன் ரிங்கிட்டுக்கு டெலிகோ​முடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கையெழுத்து ஒப்பந்த நிகழ்ச்சி, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் முன்னிலையில் நடைபெற்றது.  

இந்த ஒப்பந்தத்தின்படி, டிஎம் நிறுவனம் யு மொபைலுக்கு விரிவான ​சேவையை வழங்கும். இந்தக் கூட்டமைப்பின்படி, TM-இன் 740,000 கி.மீ ஃபைபர் (Fiber footprint) தடத்தைத் தட்டுவதன் ​மூலம் விரைவாகச் செயலாற்றும். நிறுவனங்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே நம்பகத்தன்மையான இணைப்பை இது உறுதிச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாடு டிஜிட்டல் மயமாக வேண்டும் என்ற நிறுவனங்களின் இலக்கை இந்த கூட்டமைப்பு பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

www.myvelicham.com / face book / tik tok /