பொங்கல் விழாவில் சிங்கப்பூர் டாக்டர் சின்னையா

Ponggalvila

பொங்கல் விழாவில்  சிங்கப்பூர் டாக்டர் சின்னையா

22 Jan 2026 News By: Kalaimany

பினாங்கு, சிம்பாங் அம்பாட் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில், மாபெரும் பொங்கல் விழா மிக சிறபாக நடந்தேறியது.
சிங்கப்பூர் டாக்டர் சின்னையா நாய்டு மற்றும் அவரது துணைவியார் டாக்டர் ஜோபினா நாய்டு சிறப்பு பிரமுகர்களாக வருகை தந்து சிறப்பித்தனர்.

பினாங்கு மாநில சமூக பாரம்பரிய பண்பாட்டு இயக்கத்துடன் இணைந்த ஏற்பாட்டில், பொங்கல் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி  ஸ்ரீ மீனாட்சி அம்மன் மண்டபத்தில் திரளான மக்கள் வருகையில் நடைபெற்றது.

ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான தலைவர் திரு.மு.வ.கலைமணி அவர்கள், சமூக பாரம்பரிய பண்பாட்டு இயக்க தலைவர் திருமதி சுமதி சுதாகர்  அவர்கள் முன்னிலையில் இவ்விழா களைக்கட்டியது.

பொங்கல் வைக்கும் வைபவத்தில் சுமார் 31 பெண் போட்டியாளர்களுடன் ஆலய இளைஞர் பகுதியினர் ஒரு குழுவாக  கூட்டாக பொங்கல் வைத்து பங்கு பெற்றனர்.

உறி உடைத்தல் போட்டியில் சுமார் 25 ஆண் பெண் என இருபாலரும் பங்கு பெற்று வெற்றி வாகை சூடினர்.

வண்ணம் தீட்டும் போட்டியில் இரு பிரிவுகளாக  மாணவர்கள் கலந்துக் கொண்டு  பரிசுகளை வெற்றிப்பெற்றனர்.

வருகையாளர் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

ஆடல், பாடல், நடனமுடன் இனிய இன்னிசையில் ரசிகர்கள் நனைந்தனர்.

சிங்கப்பூர் தங்க மகனாரும், கெடா, பினாங்கு புகழ் நன்கொடை நெஞ்சருமாகிய டாக்டர் சின்னையா நாய்டு மற்றும் அவரது துணைவியாரும், மருத்துவதுறையில் கல்விப் பயில செல்லும் மாணவிக்கு ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்கினர்.

தொடர்ந்து பல  நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு, உதவி என்று கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாது, தன்னாலான நிதியுதவி வழங்கி வரும் டாக்டர் சின்னாயா நாய்டு, டாக்டர் ஜோபினா நாய்டு இணையருக்கு  அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம் என்றும் நன்றி மலர்களை காணிக்கையாக்குவதாக, அதன்  தலைவர் திரு.மு.வ.கலைமணி தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்களின் நிதியுதவிகளுக்கும் நன்றி மலர்களை காணிக்கையாக்குவதாக அவர் நினைவு கூர்ந்தார்.

இதனிடையே, ஆலயத்துடன் இணைந்து இண்டாவது ஆண்டாக இவ்விழாவை சிறப்பாக  ஏற்பாடுகள் செய்திருக்கும்
மாநில சமூக பாரம்பரிய பண்பாட்டு இயக்கத்தினருக்கும் அதன் தலைவர் திருமதி சுமதி சுதாகருக்கும்  நன்றி  கூறினார்.

நிகழ்ச்சியில் அழைக்கப்பட்ட சிறப்பு பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.