மஹிமா ( MAIMA ) பொங்கள் விழாவில் தேசிய தலைவர் வரவில்லை.
Malaysia Pongal festival
Date :22 Jan 2026 News By:Kalaimany
மஹிமா ( MAIMA ) ஏற்பாட்டில் மாபெரும் மலேசிய பொங்கல் விழா.
நம் நாட்டிலுள்ள 14 மாநிலங்களை சேர்ந்த, மலேசிய இந்து ஆலயம் & இந்து அமைப்புகளின் பேரவை (மஹிமா) ஏற்பாட்டில் கடந்த ஞாயிறன்று மாபெரும் பொங்கல் விழா பத்துமலை திருமுருகர் திருத்தலத்தில் சிறப்பாக நடந்தேறியது.
பத்துமலை, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமாவின் தேசிய தலைவருமான டத்தோ ந.சிவகுமார் தலைமையில் இவ்விழா பிரமாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மஹிமாவின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று பொங்கல் வைத்த வைபவம் மக்களின் பார்வையை கவர்ந்திழுத்தது என
மாநில அளவில் கலந்துக் கொண்ட தலைவர்கள் கருத்து தேரிவித்தனர்.
இத்தகைய ஒரு செயல்பாட்டினை மஹிமா செய்ய முன்வந்திருப்பது குறித்து பல மாநில தலைவர்கள் டத்தோ ந.சிவகுமார் அவர்களுக்கு புகழ் மாலை சூட்டி மகிழ்ந்தனர்.
பெர்லிஸ், பினாங்கு முதல் ஜொஹொர், மற்றும் சபா, சரவா உட்பட மொத்தம் 14 மாநில பொங்கலுடன் மலேசியா பொங்கலும் சேர்த்து மொத்தம் 15 பொங்கல் வைக்கபட்டு பொங்கல் விழா மேலும் மெருகூட்டப்பட்டிருந்தது கண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களின் பெரும் வரவேற்பை பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பொங்கல் வைபவத்துடன் ,மெது சைக்கிள் ஓட்டம், பானை உடைத்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது.
புதிய மண்டப திறப்பு விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
இவ்விழாவை தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் நடராஜா தலைமையேற்று, தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டும் வண்ணம், நூல் வெளியீடும் செய்தார். ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் அவர்கள் சிறப்பு பிரமுகராக வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ம.இ.கா வின் தேசிய தலைவர் காணப்படவில்லை.



ganapathy







\
