விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம்

Whistle symbol for Vijay's Thaveka

விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம்

22 Jan 2026 News By: Ganapathy 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.



ஜனநாயகன் படப் பிரச்சினை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், தவெகவிற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடரர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்துள்ளது.