மலேசியன் ஏர்லைன்ஸ் & ஏர்ஏசியா விமான முன்பதிவு பெயர் விதிகளைப் புதுப்பிக்கின்றன
Malaysia Airlines and AirAsia have revised their flight booking name entry rules to align with international standards, requiring passengers to enter their full names exactly as they appear on official documents.

Dated: 12.6.2025 Time: 3.15 pm By Punithai
கோலாலம்பூர்,
மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா ஆகிய இரு விமான நிறுவனங்களும், சர்வதேச தரங்களுக்கு ஏற்பவும், குறிப்பாக சீரற்ற பெயர்களைக் கொண்ட பயணிகளுக்கு செக்-இன் செய்யும் போது ஏற்படும் முரண்பாடுகளைத் தடுக்கவும், சிக்கல்களைக் குறைக்கவும், இரண்டு விமான நிறுவனங்களும், இப்போது பயணிகளின் முழுப் பெயர்கள், கடவுச் சீட்டுகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தோன்றுவது போலவே உள்ளிடுமாறு பயணிகளைக் கேட்டுக் கொள்கின்றன.
மலேசியன் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் திருத்தப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்றவாறு பயணிகளுக்கு உதவ விரிவான முன்பதிவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களில் உள்ள பெயர் மரபுகளுக்கு இடமளிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட பெயர் மற்றும் குடும்பப் பெயர் இடையே தெளிவான வேறுபாட்டை பயணிகள் காட்ட வேண்டும்.
குறியீடுகள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், ஒரு பயணினுடைய பெயரின் நீளம், கணினி வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், விமான நிறுவனங்கள் இதுபோன்ற மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு விமான நிறுவனங்களின் இணையதளங்கள் அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நன்றி. மலாய் மெயில்