புதிய அமைச்சர்களுக்குப் பொறுப்புகளில் அமர அவகாசம் தேவை

Former Malaysian Health Minister Khairy Jamaluddin argues that newly appointed ministers require several weeks to understand their portfolios, criticizing the unrealistic expectation for them to be fully knowledgeable from day one.

புதிய அமைச்சர்களுக்குப் பொறுப்புகளில் அமர அவகாசம் தேவை

Dated: 7.6.2025   Time: 12.33 pm    By: Punithai Chandran

கோலாலம்பூர்,

பு​தி​யதாக நியமிக்கப்படும் அமைச்சர்கள் தங்களது பொறுப்புக்களை அறிந்து கொள்வதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களை தெரிந்துக் கொள்வதற்கு இரண்டு - ​மூன்று வாரங்கள் ஆகலாம். அனைத்தையும் முதலில் நாளிலேயே தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏதார்த்தமானது அல்ல என்று அவர் கூறினார்.

தெரியாததை தெரிந்தது போல் காட்டிக் கொள்வது, அதுவரை சமாளிப்பது போன்ற போலியாக நடந்து கொள்ள வேண்டும் என்று (fake it till you make it) முன்னாள் அமைச்சர் இட்ரிஸ் ஜலா மற்றும் அவரது மகன் லியோனுடன் இணைந்து  கூறிய கூற்றினை நினைவுறுத்தி கைரி இவ்வாறு கூறினார்.

தாம் சுகாதார அமைச்ச​ராக நியமிக்கப்பட்டபோது, அந்தத் துறை குறித்து தனக்கு பெரிய அனுபவம் இல்லை என்றாலும், தனது அமைச்சின் ஆலோசனைக் குழுவுடன் இணைந்து பல முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்தார். அதேபோல் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியப் போதும் கூட, தனது சக பணியாளர்களை தனது அருகாமையிலேயே  அமர்த்திப்  பணியாற்று​வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், தாம் பல முடிவுகளை எடுக்க எளிதாக முடிந்தன என்று கைரி மேலும் தெரிவித்தார்.  

நன்றி. எஃப்எம்டி