கிளானா ஜெயா மற்றும் LRT வழித்தடத்தில் கோளாறு காரணமாக ரயில் தாமதம்
A track switch malfunction on the Kelana Jaya LRT line has led to significant delays .

Dated: 9.6.2025 Time: 11.30 am By: Punithai Chandran
கோலாலம்பூர்:
கிளானா ஜெயா LRT வழித்தடத்தில் ஏற்பட்ட தடத்தில் ஏற்பட்ட மாறுதல் மற்றும் கோளாறு காரணமாக, புத்ரா ஹைட்ஸ் செல்லும் பாசார் செனி மற்றும் பேங்க் ராக்யாட்-பங்சார் நிலையங்களுக்கு இடையேயிலான ரயில் சேவை தாமதமாகியுள்ளது. அதனால், இந்த வழித்தடங்களுக்கான சேவை மெதுவாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .
ரேபிட் ரயில் நிறுவனம், இன்று காலை 5.30 மணியளவில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், ரயில் அட்டவணைகள் குறித்து நிலையங்களில் தொடர்ந்து அறிவிப்புகள் செய்யப்படுகின்றன என்றும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரேபிட் ரயில் நிறுவனத்தின் பொறியியல் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தில் சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பும் என்றும் மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் அண்மையத் தகவல்களுக்கு ரேபிட் KL-இன் சமூக ஊடக தளங்களைப் பின்தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
நன்றி. எஃப்எம்டி