ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குச் செல்லும் முக்கிய சாலைகள் மூடப்படும் பி விடப்படும்.
The 2025 ASEAN Summit, scheduled from May 23 to 28 in Kuala Lumpur,

Date :20 May 2025 News By: PuniThai Chandran Time :7.00pm
கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குச் செல்லும் முக்கிய சாலைகள் மூடப்படும் .போக்குவரத்துத் துறை அறிவிப்பு
எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2025 ஆசியான் உச்சநிலை மாநாடு, கோலாலம்பூர், KLCC மாநாட்டு அரங்கில் நடைபெறுவதினை முன்னிட்டு, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 6 முக்கிய நெடுங்சாலைகள் மற்றும் 25 முக்கியச் சாலைகள் மூடப்படும் என்றும், அதன் வழித்தடங்கள் திருப்பி விடப்படும் என்றும் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ முகமட் யூஸ்ரி ஸசான் பாஸ்ரி அறிவித்துள்ளார்.
கோலாலம்பூர் KLIA, மற்றும் அங்கிருந்து செல்லும் சாலைகள், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம், கோலாலம்பூர் மாநாட்டு (KLCC) மையம், ஸ்தானா நெகாரா மற்றும் வெளிநாட்டுப் பேராளர்கள் தங்கக்கூடிய தங்கும் விடுதிச் சாலைகள் ஆகியவை, பாதிக்கப்படும் சாலைகளில் அடங்கும்
குறிப்பாக, நகரத்திலுள்ள முக்கியமான நெரிசலைத் தவிர்க்க பொதுமக்கள் மாற்று வழிச் சாலைகள் அல்லது LRT – MRT - Mono Rail போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்துமாறு டத்தோ முகமட் யூஸ்ரி ஸசான் பாஸ்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநிலை மாநாடு நடைபெறும் நாட்களில், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள் வீட்டிலிருந்து தங்களது பணிகளைத் தொடருவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
www.myvelicham.com face book tik tok you tube
Thank You. New Straits Times.