Uncovering the Killing Fields of Wang Kelian" - அநீதியை எதிர்கொள்ள ஓர் அழைப்பு

Dato' S. Aruldass's crucial new book, "Mass Graves: Uncovering the Killing Fields of Wang Kelian," delves into a tragic and disturbing chapter of Malaysia's history.

Uncovering the Killing Fields of Wang Kelian

Dated: 6.6.2025      Time: 1.30 pm   By: Punithai Chandran

"Mass Graves: Uncovering the Killing Fields of Wang Kelian"  என்ற பெயரைக் கொண்ட டத்தோ எஸ். அருள்தாஸ் எழுதிய மிக முக்கியமான புத்தகம் அண்மையில் வெளியீடு கண்டது. இந்தப் புத்தகம் நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் கலக்கமூட்டக் கூடிய அத்தியாயங்களில் ஒரு பகுதியை எழுத்தாளர் எழுதியுள்ளார்.  

இந்த நூல் வெறும் ஆவணம் மட்டுமல்ல -  இதுவோர் அழைப்புக்கான புத்தகம் ஆகும். மௌனத்தால் அநீதியை வெல்ல முடியும் – செயல்படுத்த முடியும் என்ற மன உறுதியை இது எடுத்துக் காட்டும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. உண்மை எவ்வளவு சங்கடமானதாக இருந்தாலும், அதனைத் துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதையே இது நினைவூட்டுகிறது. அயராத அர்ப்பணிப்புடன், இந்தப் புத்தகத்தை துணிவுடன் எழுதிய டத்தோ அருள்தாஸ் அவர்களுக்கு இந்து தர்ம மாமன்றம் தனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டது.  

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழு உறுப்பினர்,  மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு மற்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு கிளையின், சமயக் கல்விக் குழுத் தலைவர் டத்தோ அருள்தாஸ்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.   

மேலும் ​டத்தோ அருள்தாஸ் அவர்களால் தனிப்பட்ட முறையில் புத்தகத்தின் ஒரு பிரதி ஒன்று தர்ம மாமணி எஸ்.வி. மணிமாறனுக்கு வழங்கினார்.

மாமன்றத்திற்கு சிறப்பு அழைப்பு விடுத்த டத்தோ அருள்தாஸ் அவர்களுக்கு, பினாங்கு இந்து தர்ம​ கிளையின் சார்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.