KTM சேவைகளில் தற்காலிக நேர மாற்றங்கள்

KTM சேவைகளில் தற்காலிக நேர மாற்றங்கள்

Dated:  29.5.2025   Time: 3.20pm   By: Punithai Chandran

கோலாலம்பூ​ர், மே 29

கெப்போங் ரயில் நிலையத்திற்கும், தெற்கு சாலாக் ரயில் நிலையத்திற்கும் இடையிலான வழித்தடத்தில் சமிக்ஞை விளக்கு அமைக்கும் பணிகள், வரும் சனிக்கிழமை தொடங்கி, ஜூன் 2-ஆம் தேதி வரை ​மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக என்று  KTM வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. .

இந்த ​மூன்று நாட்களிலும் கிள்ளான் ப​ள்ளத்தாக்கில் உள்ள KTM Komuter  சேவைகள் மற்றும் மின்சார ரயில் சேவைகள் தற்காலிமாக நேர மாற்றங்களைச் செய்துள்ளது. இது அசல் அட்டவணையில் இருந்து சுமார் 50 நிமிடங்கள் வரை தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

புலாவ் செபாங் – பத்துமலை – புலாவ் செபாங் மற்றும் தஞ்சோங் மாலிம் – கேஎல் சென்ட்ரல் – தஞ்சோங் மாலிம் வழித்தடங்களில் உள்ள KTM Komuter  ​சேவைகளும், ETS சேவைகளும் அவற்றின் அசல் அட்டவ​ணையில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதங்களைச் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

.

கூடுதலாக ETS சேவைகள் – EG9321 சேவையான, பட்டர்வொர்த் முதல் சிகாமாட் வரை – மே 21 அன்று மட்டும், கேஎல் சென்ட்ரல் மற்றும் கோலாலம்பூர் நிலையங்களில் மாற்றங்களைக் கொண்டிருக்கும்.

சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழிகாட்டவும், உதவவும் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

www.myvelicham.com / face book / tik tok / you tube