கோலாலம்பூர் மாநகரின் போக்குவரத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது

Kuala Lumpur City Hall is utilizing Artificial Intelligence to ease traffic congestion. The initiative includes integrating AI into smart city management, particularly enhancing traffic management through Digital Twin technology.

கோலாலம்பூர் மாநகரின்  போக்குவரத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது

Dated: 22.5.2025      Time:  1.50 pm     By: Punithai Chandran

கோலாலம்பூர்,  மாநகரின் போக்குவரத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது

கோலாலம்பூரின் மாநகர் போக்குவரத்தை எளிதாக்க DBKL செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, மாநகர் மன்றம் செயற்கை (AI) நுண்ணறிவை பல்வேறு ஸ்மார்ட் சிட்டி நிர்வாக அம்சங்களுடன் ஒருங்கிணைத்து, அதில் டிஜிட்டல் இரட்டை (Digital Twin) மற்றும் AI ​மூலம் இயங்கும் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகும் என்று டிஜிட்டல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும் இது AI மற்றும் 5G உள்ளிட்ட டிஜிட்டல் தொழில் நுட்பங்களை ஏற்றுக் கொள்ளும் முயற்சியுமாகும்.

கோலாலம்பூர் போன்ற ​பெரிய நகரங்களில் AI பயன்பாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை நவீனப்படுத்துவதை விரைவுப்படுத்துகிறது. இது நகர்ப்புற நிர்வாக திறனையும், நகரக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முக்கியப் பங்காற்றும். .

இதன் தொடர்பாக, எதிர்வரும் செப்டம்பர் 17 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஸ்மார்ட் சிட்டி (Smart City Expo) என்ற கண்காட்சி, இதன் நோக்கங்கள் மற்றும் சாதனைகளை காட்சிப்படுத்தும் ஒரு முக்கியத் தளமாக இருக்குமென்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

www.myvelicham.com நன்றி. மலாய் மெயில்