பி.கே.ஆர். தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றமில்லை - அன்வார்
Prime Minister Anwar stated there will be no cabinet reshuffle after the PKR elections and that ministers are free to resign if they wish

Dated: 22.5.2025 Time: 12.30 pm By: Punithai Chandran
புத்ரா ஜெயா,
பி.கே.ஆர். கட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் இருக்காது. ஆனால் யாரையும் அவர்களின் இலக்குகளைத் தடுக்க மாட்டேன் என்றும், அவ்வாறு எந்த அமைச்சரும் ராஜிமானா செய்ய விரும்பினால், அதையும் தடுக்க மாட்டோம் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாடு குறித்த ஊடக விளக்கத்திற்குப் பின்னர் இதனைத் தெரிவித்தார்.
கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியில் வெற்றிப் பெறத் தவறினால், பொருளாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி அறிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறாரா என்று வினவிபோது, முதலில் தாம் அவரிடம் பேசுவதாக அன்வார் கூறினார்.
நன்றி த ஸ்டார்