சுபாங் ஜெயாவில் 20-வது மாடியிலிருந்து விழுந்த சிறுமி உயிரிழந்தது
A 7-year-old girl fell from the 20th floor to the 5th floor of an apartment building in Subang Jaya, resulting in her death.

Dated: 22.5.2025 Time: 11.40 By: Punithai Chandran
கோலாலம்பூர், - நேற்று சுபாங் ஜெயா ஒரு தங்கும் குடியிருப்பு கட்டிடத்தின் 20-வது மாடியிலிருந்து ஐந்தாவது மாடிக்கு விழுந்ததில், எழு வயது சிறுமி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், மருத்துவ அதிகாரியும் அச்சிறுமியை பரிசோதித்து, அச்சிறுமி இறந்து விட்டதாக உறுதிப்படுத்தினர் என்று சுபாங் ஜெயா துணை போலீஸ் சூப்பர்டெண்ட்ன்ட் முகமது பைருஸ் ஜாபார் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது, சிறுமியின் தாயார் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தாகவும், தந்தை வேலைக்கு சென்றிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு கிரில் இல்லாத ஜன்னல் வழியாக ஏறிச் சென்றபோது, சிறுமி கீழே விழுந்துள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணை ஆவணங்கள் முடிந்ததும், வழக்கு துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
www.myvelicham.com / Face book நன்றி. மலாய் மெயில்