உலக போட்டித்திறன் தரவரிசை 2025-இல் மலேசியா 23வது இடத்திற்கு முன்னேற்றம்
Malaysia has climbed 11 spots to 23rd place in the World Competitiveness Ranking 2025, marking its best performance in five years.

Dated: 17.6.2025 Time: 11.40 am By: Punithai Chandran
கோலாலம்பூர்
மலாக்கா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் பலனளித்து வருவதால், மலேசிய நாடு உலக போட்டித்திறன் தரவரிசை 2025-இல் மலேசியா, 11 இடங்கள் முன்னேறி இப்போது 23-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சிறந்த வளர்ச்சியாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இந்தச் சாதனை அனைத்து மலேசியர்களுக்கும் உரியது என்றார்.
இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம், வலுவான அரசியல், திறமையான அரசாங்க இயந்திரம் மற்றும் தனியார் துறையுடனான நெருங்கிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழி பெறப்பட்டதாகும்.
நமது குழந்தைகளுக்கான சிறந்த எதிர்காலத்திற்காக, 2033-ம் ஆண்டுக்குள் இந்த நாட்டை மிகவும் போட்டித்திறன் கொண்ட பொருளாதாரக் குழுவில் நிலைநிறுத்துவதே இந்த அரசாங்கத்தின் முக்கியப் பயணமாகும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (Institute for Management Development) ஆண்டுதோறும் வெளியிடும் உலக போட்டித் திறன் தர வரிசையின்படி, மலேசியா இப்பொது இந்த இடத்தைப் பிடித்துள்ளது என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
நன்றி. பெர்னாமா