மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஜி. பழனிவேல் காலமானார்

Dated: 17.6.2025 Time: 11.40 am By: Punithai Chandran
கோலாலம்பூர்
முன்னாள் மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் இன்று காலை 8.00 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 75. இந்த செய்தியை மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா உறுதிப்படுத்தினார்.
பழனிவேல், மார்ச் 1, 1949 அன்று பினாங்கில் பிறந்தார். அவர் டிசம்பர் 2010 முதல் ஜூன் 2013 வரை மலேசிய இந்திய காங்கிரஸின் (MIC) 8-ஆவது தலைவராகப் பணியாற்றினார். அவரது அரசியலில் இருந்த பொழுது, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (2013-2015) மற்றும் பிரதமர் துறை அமைச்சர் (2011-2013) போன்ற பதவிகளில் சேவையாற்றியுள்ளார். அவர் பல துணை அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். மேலும் உலு சிலாங்கூர் மற்றும் கேமரன் ஹைலேண்ட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
நன்றி. பெர்னாமா