30 ஆண்டுகளுக்குப் பிறகு பயிற்சி ஆசிரியர்கள் சங்கமம்.
Trainee teachers come together after 30 years.

09 May 2025 News By: Victor
கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (Maktab Perguruan Tuanku Bainun) படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்கள், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, ஆசிரியரும், இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான திரு. அ. விக்டர் தெரிவித்தார்.
எதிர்வரும் 30- 8- 2025 ஆம் தேதி, தலைநகரிலுள்ள ஒரு தங்கும் விடுதியிலும், மநுநாள் 31ஆம் தேதி பத்துலை தமிழ்ப்பள்ளியிலும் பல சிறப்பான அங்கங்களுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதுவரை 150 ஆசிரியர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிகழ்ச்சியின் சிறப்புப் பிரமுகராக மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்துக் கொள்வார் என்றும் அ. விக்டர் குறிப்பிட்டார்.
மேல் விவரங்களுக்கு A. விக்டர் 016- 3814597 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்து விளக்கம் பெறலாம் என்றும் தெரிவித்தார்.
www.myvelicham.com / Face book /