மலேசிய பட்டதாரிகளின் வருமானம் மற்றும் சேமிப்பு ஆய்வு

A labor market research report states that although Malaysian graduates earn sufficient income, they lack adequate savings.

மலேசிய பட்டதாரிகளின் வருமானம் மற்றும் சேமிப்பு ஆய்வு

Dated: 23.5.2025  Time:  3.20 pm  News By: Punithai Chandran

மலேசியப் பட்டதாரிகளின் வருமானம் மற்றும் சேமிப்பு மீதில் ஓர் ஆய்வு அறிக்கை மலேசியாவின் பட்டதாரிகள் போதுமான வரு​மானத்தை ஈட்டுகிறார்கள் என்றும், உயர்க்கல்வி கணிசமான ஊதிய உயர்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றாலும், அவர்களால் சேமிக்கவோ அல்லது பொருளாதார ரீதியாக முன்னேறவோ  போதுமான சேமிப்பு இல்லை என்று  தொழிலாளர் சந்தை ஆய்வு குழுவின் புதிய அறிக்கையொன்று கூறுகிறது.

வேலை செய்யும் பட்டதாரிகளில் 70% சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பகுதி மற்றும் குறைந்த திறன் கொண்ட வேலைகளில்தான் உள்ளனர். மேலும் 65​% சதவிகிதத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் மாதம் 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.

இந்த தகுதிகளும் - வேலைகளும் பொறுத்தமில்லாத ஊதியத்தையும், , உயர்க்கல்விக்கு செலவாகியுள்ள நிதியைக் கூட ஈடுகட்ட முடியாத நிலையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

எனவே. பட்டதாரி கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இடைவெளியைக் குறைக்கும் வகையில், பயிற்சித் திட்டங்களை மறுசீரமைப்பு மற்றும் வேலை வாய்ப்பு கொள்கையில் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அத்துடன் கல்வித் திட்டம், தொழிலாளர் சந்தை தேவை மற்றும் பொருத்தமான ஊதியத்தை வழங்குதல் ஆகியவற்றினை எல்லாம் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு துணிச்சலான சீர்திருத்ததையும் முழுமையாக்கப்பட வேண்டுமென்று அந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.  

www.myvelicham.com / face book / tik tok / you tube