இரண்டரை வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை
A shocking incident in Mumbai where a two-and-a-half-year-old girl died after allegedly being sexually assaulted by her mother's boyfriend.

Dated: 21.5.2025 Time: 6.15 pm By: Punithai Chandran
இரண்டரை வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை -மும்பையில் அதிர்ச்சி சம்பவம் தாயின் காதலன்கைது ,
இந்தியா, மும்பை மால்வாணி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டரை வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், 19 வயது வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி உல்லாசமாக இருந்துள்ளனர்.
பின்னர் அந்த வாலிபர் பெண்ணின் இரண்டரை வயது மகளை அவளது கண் முன்பாகவே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், பயந்துபோன பெண், தனது மகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனது மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயத்தை பார்த்த மருத்துவர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு, சிகிச்சையைத் தொடங்கினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து, போலீசார் சிறுமியின் தாயிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இந்த பாலியல் பலாத்காரம் பற்றிய உண்மை வெளிவந்தது. தற்போது இருவரும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
www.myvelicham.com / Face book / tik tok / you tube