வாடகை செலுத்தாமல், MPTI கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்த நபர் மீது நடவடிக்கை

Action against the person who broke the glass of the MPTI building without paying rent.

வாடகை செலுத்தாமல், MPTI கட்டிடத்தின்  கண்ணாடியை உடைத்த நபர் மீது நடவடிக்கை

Date :15 May 2025 News By; Punitha Chandran 

தெலுக் இந்தான் மே 12 

கடந்த வாரம் தெலுக் இந்தான், ஜாலான் பண்டாரில் உள்ள ஒரு மாலில் 63 வயதான கடிகாரக் கடைக்காரர், தெலுக் இந்தான் நகராட்சி மன்ற (MPTI) கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிக் கதவை உடைத்த நபர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவரது கடையை வாடகைக்கு எடுப்பதை நிறுத்தப்பட்டு, கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். 

சுமார் 20,000 பேர் கலந்துக் கொண்ட சித்ரா பெளணர்மி திருவிழா அன்று, அவரது கடைக்கு முன் கூடாங்களை அமைக்க நகராட்சி மன்றம் எடுத்த முடிவில் அதிருப்திக் கொண்ட அவர் இந்தச் செயலைச் செய்துள்ளார். மேலும், அந்த நபருக்கு கடையைக் காலிச் செய்ய தெலுக் இந்தான் நகராட்சி மன்றம் ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்திருந்தது என்றும், மாதம் 150 வெள்ளி வாடகைக் கூட வாடகை செலுத்தாத முடியாத அவர், பொது சொத்தினைச் சேதப்படுத்தியதால், இனிமேல் அவர் இங்கு கடையை வாடகைக்கு எடுக்க முடியாது என்றும், பேராக் மாநிலத்தின் நிர்வாக கவுன்சிலர் ஏ. சிவனேசன் தெரிவித்தார். இந்த சம்பவம் இங்குள்ள இதர வாடகைக்காரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்குமென்றும் சித்ரா பெளர்ணமி விழாவில் கலந்துக் கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.  

நன்றி. மலாய் மெயில்

www.myvelicham.com