நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

Actress Sarojadevi's demise: celebrities express condolences.

நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

Date :15 July 2025 Time :12.30pm News:Jayarathan 

‛கன்னடத்து பைங்கிளி'-யான நடிகை சரோஜா தேவியின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பெங்களூருவின், மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜோகூர் மாநில பிரபல புகைப்பட  கலைஞர்  இராஜாராம்

ஒரு பொற்கால திரையுலக யுகம் முடிவுக்கு வந்தது. சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் மிகப்பெரிய நடிகையாக இருந்தவர். தென்னிந்தியாவில் வேறு எந்த பெண் நடிகையும் அவரைப் போல் புகழையும் பெயரையும் பெறவில்லை. அவர் மிகவும் அன்பான, அழகான ஆன்மா. அவருடன் மிக நல்ல உறவு இருந்தது. பெங்களூரு பயணித்தால் அவரைச் சந்திக்காமல் முழுமையடையாது. சென்னையில் இருக்கும்போது, அவர் அழைப்பார். அவரை மிஸ் செய்கிறேன். அம்மா, அமைதியாக ஓய்வெடுங்கள். இராஜாராம்