முன்பு தரமற்றதாகக் கூறப்பட்ட 17 மருத்துவ சாதனங்கள் இப்போது பாதுகாப்பானவை என MDA அறிவித்துள்ளது
Malaysia's Medical Device Authority (MDA) announces that 17 previously identified medical devices, lacking quality control in earlier safety checks, are now safe for public use

Dated: 3.6.2025 Time: 1.30 pm By: Punithai Chandran
மருத்துவ சாதனங்கள் ஆணையத்தால், முன்பு பாதுகாப்பு சோதனைகளில் தரக்கட்டுப்பாடு இல்லாமல் இருந்ததாகக் கூறப்பட்ட 17 மருத்துவ சாதனங்கள், இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக உள்ளன என்று MDA தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முரளிதரன் பரமசுவா தெரிவித்துள்ளார்.
அந்த கேள்விக்குரிய சாதனங்கள், Dynmed பிராண்ட் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்; ஏஞ்சல் பிஸ் (SH01) மற்றும் கேரர்; இரத்த அழுத்த மானிட்டர்கள் (BPLife, Novoplus, Yuwell மற்றும் Ouson+); குளுக்கோஸ் மீட்டர்கள் (Roche, Sinocare மற்றும் Yasee); வெப்ப மானிகள் (BioCare, Scaneo மற்றும் Ouson+); அத்துடன் அறுவை சிகிச்சை மற்றும் பரிசோதனை கையுறைகள் (Gammex, Shirudo, Puritex மற்றும் Infinity Latex) ஆகியவை அடங்கும்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி MDA அறிக்கை ஒன்றின் வழி, சாதனங்களின் தரக் கட்டுப்பாட்டு நிறைவுகளை பூர்த்திச் செய்யவில்லை என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் முரளிதரன் பரமசுவா தெரிவித்தார்.
இதன்வழி, தரக்கட்டுப்பாட்டின் வெளிப்படையான தன்மையானது, பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியுள்ளதாக டாக்டர் முரளிதரன் கூறினார்.
எனவே, பொது மக்கள் மருத்துவ சாதனைகளை ஆன்லைனில் வாங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ சாதனைகள் MDA-இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், உரிமம் பெற்ற நிறுவனங்களால் விற்கப்படுகின்றதா என்பதையும் பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் மற்றும் புகார் அளிக்க விரும்பினால், MDA-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mda.gov.my மூலமாகவோ அல்லது 03-82300300 என்ற எண்ணை அணுகலாம்.
நன்றி. எஃப்எம்டி