கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர் ...
The first chief minister who decided to build a college with temple funds ...

Date : 21 July 2025 Time 9.45pm News By: Ganapathy
கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர்
இதுகுறித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் உதவி ஆணையரான அழ. முத்து பழனியப்பன்,"பழனியில் தண்டாயுதபாணி கோவில் சார்பில் முதன் முதலில்
1960-ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது ஒரு கல்லூரி துவங்கப்பட்டது. இதற்கு பழனி ஆண்டவர் காலேஜ் ஆஃப் இந்தியன் கல்ச்சர் எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கல்லூரியில் இந்திய கலாசாரம், தத்துவம், சைவம், வைணவம், கோவில் கட்டடக் கலை உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் பணி வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. " என கோவில்களின் சார்பில் கல்லூரிகள் நடத்தத் துவங்கிய வரலாற்றை விவரித்தார்.
www.myvelicham.com