பிரதமர் நம்பிக்கை தெரிவித்த போதிலும் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

Economy Minister Rafizi Ramli appears set to follow through with his resignation, despite Prime Minister Anwar Ibrahim's hope that he would reconsider.

பிரதமர் நம்பிக்கை தெரிவித்த போதிலும்  பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

Dated: 13.6.2025   Time: 4.40 ​pm  By: Punithai Chandran

பெட்டாலிங் ஜெயா,

பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான முடிவை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது. ராஜினாமாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும்,  ரஃபிஸி X தளத்தில் தனது கடைசி பணி நாள் பற்றிப் பதிவிட்டுள்ளார்.

தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரஃபிஸி, தனது அலுவலகத்தை காலி செய்து வருவதாகவும, இறுதியாக சில விஷயஙகளை சரி செய்வதற்காக தாம் அலுவலகத்திற்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தனக்காகப் பணியாற்ற சம்மதிக்க வைத்த பணியாளர்கள் மீண்டும் அவர்களின் துறைகளுக்கே திரும்புவார்கள் என்றார்.

ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் மே 28 அன்று தங்கள் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்தனர். இருவரும் PKR கட்சித் தேர்தல்களில் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி. எஃப்எம்டி