SST விரிவாக்கம் 5.4 மில்லியன் மலேசியர்களுக்கு பயனளிக்கும்
Treasury Secretary-General Datuk Johan Mahmood Merican announced that the upcoming Sales and Services Tax (SST) expansion, effective July 1, will benefit 5.4 million low and middle-income Malaysians (B40 and M40) by largely not affecting.

Dated: 13.6.2025 Time: 6.35 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்
ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் விற்பனை மற்றும் சேவை வரி (SST) விரிவாக்கத்தால் 5.4 மில்லியன் (B40 மற்றும் M40) குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மலேசியர்கள் பயனடைவார்கள் என்று கருவூலத் தலைமைச் செயலாளர் ஜோஹான் முகமட் மெரிக்கான் கூறினார். இந்த வரி அவர்களின் தினசரி செலவினங்களை பெரும்பாலும் பாதிக்கப்படாது என்றார்.
SST விரிவாக்கம் என்பது, அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே இலக்காகக் கொண்டதாகும். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் பிரீமியம் கடல் சார்ந்த உணவுகளுக்கு 5% SST விதிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களான சமைக்காத உணவுகளான, கோழி, இறைச்சி, உள்ளூர் காய்கறிகள், அரிசி மற்றும் அடிப்படைப் பதப்படுத்தப்பட்ட உணவுகளான மாவு, சர்க்கரை, ரொட்டி, பால், சமையல் எண்ணெய் மற்றும், மருந்துகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றுக்கு SST- இல் இருந்து விலக்கு அளிக்கப்படும்
மேலும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றில் அமைச்சு விலைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் மற்றும் Jualan Rahmah மற்றும் Agro Madani மூலம் மலிவு விலையில், மாற்று வழிகளையும் வழங்கும் என்றும் ஜோஹான் உறுதி அளித்தார்.
நன்றி. எஃப்எம்டி மலாய் மெயில்