ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம்
Tensions between Iran and the United States
Date:05 Feb 2026 News By:Maran
Drone Mother Ship — ஒரு ஆயுதம் அல்ல. போரியல் மாற்றத்தின் அறிகுறி ஒருகாலத்தில் போர் என்றால் கண்ணுக்குத் தெரிந்தது.
பெரிய கப்பல்கள். வானத்தைப் பிளக்கும் விமானங்கள். வரைபடங்களில் இழுக்கப்படும் அம்புக்குறிகள்.அப்போது சக்தி என்றால் —அளவு. ஆனால் இப்போது, போர் அளவைக் குறைத்து கருத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு கடலில் ஒரு விமானக் கப்பல் மிதக்கிறது. அது ஒரு கப்பல் அல்ல. ஒரு நகரம். மின்சாரம். மருத்துவமனை. விமான நிலையம்.
ஆட்சிக் கட்டமைப்பு. எல்லாம் அதில். அதை அழிக்க வேண்டுமா?
இல்லை. அதை பயனற்றதாக மாற்றினாலே போதும். இதுதான்
புதிய போரியல் சிந்தனை.
அமெரிக்காவின் யுத்தக் கணக்கு எளிது: விலை உயர்ந்த ஆயுதங்கள் பிரமாண்டமான தொழில்நுட்பம் முழுமையான கட்டுப்பாடு இது Industrial-age warfare.
ஒரு விமானம் விழுந்தால் ஒரு அரசியல் விவாதம். ஒரு கப்பல் சேதமடைந்தால் ஒரு நாடாளுமன்ற விசாரணை. போர்க்களம் மட்டுமல்ல, அரசியலும் உடன் நகர்கிறது.
ஈரான் எடுத்துள்ள பாதை வேறு: மலிவு, எண்ணிக்கை, தொடர்ச்சியான அழுத்தம். ஒரு ட்ரோன் விழுந்தால்? அடுத்தது எழும். இது Psychological + Economic warfare. எதிரியை அழிப்பது அல்ல.
எதிரியின் செலவை உயர்த்துவதே முக்கிய தாக்குதல்.
இந்த “Drone Mother Ship” ஒரு கப்பல் அல்ல. அது ஒரு கேள்வி.
“Boss...இந்த கடலில் நீங்க இன்னும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?”
இது நேரடியாக தாக்குவதற்காக அல்ல. இது கண்காணிப்பை சோர்வடையச் செய்ய உருவாக்கப்பட்டது. எதிரியை எப்போதும் Alert mode-ல் வைத்திருக்க உருவாக்கப்பட்டது. அமைதி இல்லாத கடல் அதுவே ஒரு வெற்றி. ஒரு அமெரிக்க விமானக் கப்பலின் மதிப்பு பல ட்ரோன் கப்பல்களின் மொத்த செலவையும் தாண்டும்.
அதனால், ஈரான் தாக்க வேண்டிய அவசியமே இல்லை. அமெரிக்கா
தன்னைப் பாதுகாக்கவே தன்னைத்தானே சோர்வடையச் செய்கிறது.
இதுதான் Asymmetric Warfare-யின் அழகான கொடூரம். Asymmetric Warfare என்றால் சமமான பலத்துடன் நடக்கும் போர் அல்ல. ஒருபுறம் பெரிய ஆயுதங்கள். பெரிய படைகள். பெரிய செலவுகள். மறுபுறம் சிறிய கருவிகள். குறைந்த செலவு. ஆனால், கூர்மையான சிந்தனை. இதில் “அழகு” எங்கே? அழகு — கணக்கில்.
ஒரு F-35 விமானம் = பல கோடி டாலர்கள். ஒரு ட்ரோன் = அதில் ஒரு சிறு பகுதி. அந்த ட்ரோன் அந்த F-35-ஐ வீழ்த்த வேண்டியதில்லை. அதை எழாமல் வைத்தாலே போதும். வானில் பறக்காத விமானம்
ஒரு தோல்வி தான். இதுதான் அழகு. கொடூரம் — விளைவில்
இந்த போரில் ரத்தம் குறைவு. ஆனால் சோர்வு அதிகம்.
எதிரி: எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எப்போதும் செலவு செய்ய வேண்டும் எப்போதும் தவறு செய்யக்கூடாது ஆனால் சிறிய தரப்பு ஒரு தவறு செய்தாலும் மீண்டும் எழலாம். இதுதான் கொடூரம்.
ஏன் “அழகான” கொடூரம்? ஏனெனில் இது நேரடியாக அழிக்காது. அது: எதிரியின் தூக்கத்தை கெடுக்கும். அரசியல் முடிவுகளை சிதைக்கும் பொருளாதாரத்தை மெதுவாக கசக்குகிறது
ஒரு கட்டடம் இடியாது. ஆனால் அதன் அடித்தளம் ஒவ்வொரு நாளும் சற்று சற்றாக உடையும். அது பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும். அதுதான் அழகு. அது அனுபவிப்பவருக்கு தாங்க முடியாதது. அதுதான் கொடூரம். Asymmetric Warfare-ல் வெற்றி என்பதுbஒரு நாளில் கிடைப்பது அல்ல. எதிரி ஒருநாள் இந்த கேள்வியை
தானாகக் கேட்கும்:
“இந்தச் செலவு இனியும் நியாயமா?” அந்தக் கேள்வி எழுந்த நாளே போர்முடிவடைகிறது.அதனால் தான் இது அழகான கொடூரம். இனி போர் எல்லையை கடக்க வேண்டியதில்லை குண்டு வீச வேண்டியதில்லை அறிவிப்புகள் தேவையில்லை போர் என்பது எதிரியின் முடிவெடுக்கும் திறனை மெதுவாக சிதைப்பது.
இந்த செய்தி “US vs Iran” அல்ல. இது, பழைய உலகின்
யுத்தக் கற்பனை. புதிய உலகின் யுத்த உண்மையை எதிர்கொள்வது. பெரியது = சக்தி என்ற சமன்பாடு
மெல்ல உடைகிறது. சிறியது + புத்திசாலித்தனம் + தொடர்ச்சி = எதிரியை முடக்குதல். ஒரு ட்ரோன் ஒரு நகரத்தை அழிக்காது. ஆனால் ஒரு போரியல் தத்துவத்தை அழிக்க முடியும்.
அதுதான் இந்த கப்பல் சொல்லும

அமைதியான செய்தி. அது
கடலில் அல்ல. வரைபடத்தில் அல்ல. எதிரியின் மனதில்.



ganapathy







\
