தொலைதூர சேவைகளை ரத்து செய்த இண்டிகோ

Indigo cancels long-distance services

தொலைதூர சேவைகளை ரத்து செய்த இண்டிகோ

Date: 05 Feb 2026 News by:  Ganapathy

நாட்டின் முன்னனி விமான சேவை நிறுவனமாக இண்டிகோ உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் விமானிகள் பற்றாக்குறை காரணமாக உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படவிருந்த நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து சர்ச்சையில் சிக்கியது.

இதனால் வரும் நாட்களில் தனது சேவையை குறைத்து கொள்வதாக விமான இயக்குனரகத்திடம் இண்டிகோ தெரிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக தொலைத்தூர சேவைகளை ரத்து செய்து இண்டிகோ அறிவித்துள்ளது. டெல்லி-லண்டன்,

டெல்லி-மான்செஸ்டர் உள்ளிட்ட விமான சேவைகளை குறைத்து கொள்வதாகவும் டெல்லி-கோபன்ஹேகன் விமான சேவையை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.