5 மில்லியன் வெள்ளி  இழப்பு ஏற்படும்

There will be a loss of $5 million

5 மில்லியன் வெள்ளி  இழப்பு ஏற்படும்
5 மில்லியன் வெள்ளி  இழப்பு ஏற்படும்

Date : 28 April 2025  News By : RM Chandran 

5 மில்லியன் வெள்ளி  இழப்பு ஏற்படும் வேப் தொடர்பான பொருட்களின் விற்பனையைத் தடை செய்வதற்கு, பல மாநிலங்களின்  தடைகளால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகள் குறித்த கவலைகளைவிட, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது முக்கியமாக இருக்க வேண்டுமென மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு (FOMCA) வலியுறுத்தியது.

181 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொது சுகாதார ஒப்பந்தமான, உலக சுகாதார அமைப்பின், புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் (WHO FCTC) கீழ், நாட்டின் கடமையை நிறைவேற்றுவதில் ஃபோம்கா  தெரிவித்தது

.

“WHO FCTC-இன் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் அனைத்து மாநில அரசாங்கங்களும் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களை - வேப் சாதனங்கள் மூலமாக நிக்கோடின் போதைக்கு அடிமையாகுதல், செயற்கை போதைப்பொருள் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் FOMCA  கூறியது.

திரெங்கானுவிலுள்ள வேப் வர்த்தகர்கள் குழு, மாநிலம் முழுவதுமாக வேப் மற்றும் இ-சிகரெட் விற்பனை தடையால், 169 சங்க உறுப்பினர்கள் மாதந்தோறும் RM5 மில்லியன் இழப்பை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டது.

வேப் மற்றும் இ-சிகரெட் வர்த்தகர்களுக்கு உரிமங்களை வழங்குவது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கீழ் இருப்பதாக சுகாதார அமைச்சர் துல்கெஃப்லி அஹ்மத் கூறினார்.

www.myvelicham.com / Face book / You Tube / Tik Tok /  Intg / Linkedin