பொருளாதாரச் சவாலுக்கு மத்தியில் நாட்டில் ஒற்றுமையைப் பேண வேண்டும்:
Maintain unity in the country amidst economic challenges:Prime Mister Anwar

28 April 2025 News By: Muniandy Krishnasamy
மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள கட்டண உயர்வு விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக சிறப்பு நாடாளுமன்ற அமர்வு வரும் மே 5ஆம் தேதி தொடங்கும்.
அமெரிக்காவின் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், அதைப்பற்றி சமாளிப்பதற்கான நடவடிக்கை குறித்து கருத்துக்கள் கூறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் நாட்டின் கெளரவத்தை காப்பதற்காக, ஒற்றுமையாக இருந்து, நமது பொருளாதார மேம்பாட்டிற்கு கடுமையாக உழைத்தால், சிறந்த நாடுகளில் ஒன்றாக ஆசியாவில் விளங்க முடியும்.
அமெரிக்காவிற்கு 140 பில்லியனுக்கும் அதிகமான 60% விழுக்காடு மதிப்புடைய பொருட்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து வருகிறோம். அனைத்துலக நாடுகளுடன் நல்ல உறவுகளை பேண வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தப் பொருளாதார வளர்ச்சியை மக்களுக்கு உறுதிச் செய்ய வேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மலேசியாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதில், 24% சதவிகிதம் உள்பட, பல நாடுகளுக்கு கட்டணங்களை விதிப்பதாக அறிவித்தார். தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Thank you Bernama.
www.myvelicham.com / Face Book / You Tube / Tik Tok / Intg / Linkedind