முறையான பத்திரங்கள் இல்லாத குடியேறிகள் பிடிபட்டனர். குடிநுழைவுத் துறை அதிரடி நடவடிக்கை

In a recent immigration crackdown at SS15 Marton Market, 38 undocumented migrants from Indonesia, India, and Myanmar were arrested by Selangor Immigration Authorities. The arrests were made under Section 6(1)(c) and Section 15(1)(c) of the Immigration Act for lacking proper documentation, expired permits, and failure to comply with immigration regulations. The authorities confirmed that these migrants were found working without the necessary legal permits.

முறையான பத்திரங்கள் இல்லாத குடியேறிகள் பிடிபட்டனர்.  குடிநுழைவுத் துறை அதிரடி நடவடிக்கை

Date: 15.5.2025 – Time; 5.05 am

By Punithai Chandran                                                               

சுபாங் ஜெயாவில் பத்திரங்கள் வைத்திருக்காத

38 குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

 

சிலாங்கூர்,  

சுபாங் ஜெயாவில் வேலை பார்த்து வந்த 38 ஆவணமற்ற  குடியேறிகள், பிரிவு 6(1)(c) மற்றும்  பிரிவு 15(1)(c) கீழ் கைது செய்யப்பட்டன​ர்.

சுபாங் ஜெயா, SS15 மார்டன் மார்க்கெட்டில் நடத்தப்பட்ட ஒரு சோதனையின்போது, இந்தோனேசியா, இந்தியா மற்றும் மியன்மாரைச் சேர்ந்த ஆவணமற்ற 38 குடியேறிகளை சிலாங்கூர் குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். முறையான பத்திரங்களை வைத்திருக்காமல் இருந்தது, காலாவதியான அனுமதிகள் மற்றும் நாட்டில் தங்குவதற்கான அனுமதிகளை பின்பற்றாமல் தவறியது ஆகிய குற்றங்களின் அடிப்படையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறையின் இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடீன் தெரிவித்தார். ​

நன்றி. எம்எம்டி