சாலை விபத்தில் 9 FRU அதிகாரிக​ள் கொல்லப்பட்டனர். லாரி ஓட்டுநர் பிடிபட்டார்

A tragic road accident on the Sungai Lambuwan road led to the death of 9 FRU (Federal Reserve Unit) police officers after a truck collided with their vehicle. The truck driver, a 45-year-old male, has been detained for four days, with reports indicating that he was under the influence of substances. The truck was found to have no suspicious items. The final rites for the fallen officers were held today in Ipoh. The investigation is ongoing, with the driver facing multiple charges.

சாலை விபத்தில் 9 FRU அதிகாரிக​ள் கொல்லப்பட்டனர்.  லாரி ஓட்டுநர் பிடிபட்டார்
FRU police officers

Dated: 15.5.2025 – Time: 4.25 pm

By Punithai Chandran 

தெலுக் இந்தான், ஜாலான் சுங்கை மானிக் – சுங்கை லம்புவான் சாலையில் கற்களைச் சுமந்து சென்ற லாரி ஒன்று, FRU வாகனத்துடன் மோதிய சாலை விபத்தில், 9 FRU காவல்துறையினர் உயிரிழந்தது தொடர்பாக, லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பேராக் தலைமை உதவி கமிஷனர் பக்ரி ஜைனல் அபிடின் தெரிவித்துள்ளார்.

லாரியில் சந்தேகத்திற்குரிய எந்தவொரு பொருளும் காணப்படவில்லை என்றும், ஆனால் ஓட்டுநரின் மருத்துவ பரிசோதனை எதிர்ம​றையாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதான அந்த ஓட்டுநர் காலை நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, அவர்மீது போதைப்பொருள், பாலியல் வன்புணர்வு மற்றும் நான்கு திருட்டுகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 9 அதிகாரிகளுக்கான இறுதி அஞ்சலி, ஈப்போவில் உள்ள FRU யூனிட் 5-ஆவது முகாமில் நிறைவேற்றப்பட்டன.   

www.myvelicham.com நன்றி ஸ்​ட்ரெயிட்ஸ் டைம்ஸ்