ஒற்றைத் தலைவலி – மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்
Migraine – Increases stress

Date : 06 May 2025 News By: Jayarathan
ஒற்றைத் தலைவலி உலகெங்கும் பல கோடி மக்களை பாதிப்பில் உள்ளாக்குகிறது. நெத்தி பொடுகின் ஒரு பக்கத்தில் வருவதால் இதனை ஒற்றைத் தலைவலி என்கின்றனர். சிலருக்கு சில நேரங்களில் இரு பக்கமும் வருவதுண்டு. சாதாரணமாக இந்த வலி வந்து போய்விடும். சில சமயங்களில் சுத்தியலால் அடித்தாற் போன்ற கடுமையான வலியையும் கொடுத்துவிடும்.
இந்த வலி வந்து போய்விட்டால் கவலையில்லை. ஆனால் தொடர்ந்தால் அதற்கான காரணங்களை அவசியமாக அறிந்துக் கொள்ள வேண்டும்.
தலை வலிக்கு பல காரணங்கள் அடிப்படையாக உள்ளன.
குறிப்பாக, உடலில் நீச்சத்துக் குறைவு - அதிக மன அழுத்தம் - அதிகமான தூரப் பயணம் - போதுமான தூக்கமில்லாமை - நைனஸ் அடைப்பு - மூளையில் பாதிப்பு – அதிர்ச்சி தரும் செய்திகள் - அதிக கோபம் – அதிகமான சிந்தனைகள் – கண்பார்வை - மலச்சிக்கல் – அஜீரணம் – கழுத்து எலும்புப் பிரச்சினை - புற்றுநோய் – சரியான மாதவிடாய் இல்லாமை – இது நின்ற பிறகு வரும் மனஅழுத்தம் – தலையில் காயம் ஏற்படுதல் – மது அருந்துதல் – பசியின்மை – பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் கெட்டப் போன உணவுகளை உண்ணுதல் – ஜலதோஷம் – அலர்ஜி – சில மருந்துகளின் பக்க விளைவுகள் – ரத்த சோகை – மூளைக் காய்ச்சல் – பிடிக்காத நறுமணம் – அதிக வெளிச்சத்தில் நீண்ட நேரம் இருப்பது – அதிக சத்தம் – அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவது – போன்ற பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.
மேற்கூறிய அனைத்துக் காரணங்களும் தனிப்பட்டவர்களின் உடல்நிலையைப் பொறுத்ததாக இருக்கலாம். எனவே, தேவைக்கு ஏற்றால் தங்களது பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம் - அல்லது பின்பற்றலாம் - அதனால் சில மாற்றங்களும் ஏற்படலாம்.
ஆனால், வலியின் கொடுமை அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை நாடுவது நல்லது. எனவே, நலமாக வாழ வேண்டுமென்றால் வாழ்வில் ஒவ்வொரு விடயத்தையும் சரிபார்த்து – சரியாகச் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
ஒற்றைத் தலைவலி – இரட்டைத் தலைவலி –
வலியின் தாக்கத்தை புரிந்துக் கொண்டு அதற்குரிய நடவடிக்கையை நாடி – நலம் பெறுங்கள்!
www.myvelicham.com