பெண்களே நீங்களே பிரபஞ்சத்தின் படைப்பாளிகள்!....
Women, you are the creators of the universe....
Date :06 May 2025 News By:Jayarathan
கர்ப்பக் காலத்தின் பெண்ணியம்
தாய்மைப் பேறு என்பது பெண்களுக்கு இயற்கை அளித்திருக்கும் ஒரு வரமாகும். பெண்களுக்கு சம உரிமை என்று முழங்குகிறார்கள். பெண்களும் கூச்சலிட்டு போர்க்கொடி தூக்கி உரிமை கேட்கிறோம். நடைமுறையில் கிடைக்கிறதா என்பது பெரிய கேள்விதான். இது உள்ளங்கை நெல்லிக்கனியாக இன்றும் சில இல்லங்களில் நடைபெற்று வருகின்றன. ஆனால் மகப்பேறு என்ற அதிசயத்தின் அதிசயமாகும். உலகச் சுழற்சிக்கு ஆதாரமாகவும், முக்கியமாகவும், ஓர் அற்புதத் தன்மையை இந்தப் பிரபஞ்சம் பெண்களுக்கு மட்டுமே விதித்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் என்ற இந்த இயற்கை நம்மைப் பற்றி நாமே பெருமைக் கொள்ள இது ஒன்று போதாதா பெண் மக்களே?
பெண்ணியம் காக்கும் பெண்களே நீங்களே பிரபஞ்சத்தின் படைப்பாளிகள்!..... இத்நப் பிரபஞ்சத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் பெண்ணியம் உங்களிடம் மட்டும்தான் உள்ளது. இதுவே இந்தப் பிரபஞ்சம் பெண்ணியத்திற்கு அளித்திருக்கும் இமாலயச் சாதனை அல்லவா?......
தாய்மை என்ற அழக்குக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை! – நிகரில்லை!. தாய்மை உறுதியாகி கருவை சுமக்கும் அந்த நாட்களில், அதுவரை இல்லாத பொலிவையும் - களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கையான இந்தப் பூரிப்பும் - பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களால், பெண்களின் புறத்தோற்றத்திலும் ஏன், அகத்திலும் கூட சில அறிகுறிகளையம், பல மாறுதக்லளகைக் காட்டவும் தாய்மைக் காலம் தவறுவதில்லை. குறிப்பாக, பாதுகாபபான தாய்மைக் குறித்த ஒவ்வொரு குடும்பமும் அறிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். கர்ப்பம் தரித்தவுடன் தாய்மை அடையும் நிலைக்கு அவர் உந்தப்படுவாள். அதனால், கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், சில நடைமுறைகள் மாறும் – அல்லது மாற்றங்கள் ஏற்படும்.
தாய்மை அடையும் பெண்கள் - .
அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெல்ல நடந்து வர வேண்டும்.
சத்து நிறைந்த உணவு மிகவும் அவசியம்.
மெலிருந்த இடை பருத்து வளரும்.
உடல் முழுக்க பூசினாற் ஓர் அழகினைக் கூட்டும்.
பிடித்த உணவு வெறுக்க வைக்கும்
பிடிக்காத உணவை ருசிக்க வைக்கும்
மாங்காய் புளிக்கும் – தேங்காய் இனிக்கும்.
நகங்களும், கூந்தலும் கூடுதலாக வளரும்
காலார நடந்து செல்லுங்கள்
உயர்ந்து நிற்கும் காலணிகளை அணியக் கூடாது.
ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றத்தைத் தந்துக் கொண்டே இருக்கும்.
இதற்கெல்லாம் மேலாக அந்தப் பெண்களின் கணவர்மார்கள் மனைவியோடு அமர்ந்து தங்களது எண்ணங்களையும் – உணர்வுகளையும் வெளிப்படுத்திக் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்துக் கொள்ள வேண்டும். இந்த கர்ப்பக் காலம் என்பது பெண்ணியத்திற்கு மட்டுமான விடையம் அல்ல! ஆண்களுக்கான விடயமும் தான் என்பதனை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். பிரசவ நேரத்தில் தாயானவள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறாள் என்பதனை தற்போது உள்ள அறிவியல் உலகத்தில், பிரசவ நேரத்தில் அவளுடைய கணவனும் உடன் இருக்கும் சூழ்நிலையும் வந்து விட்டதால், கணவன்மார்களுக்கும் அவளது சிரமங்களை உணர முடிகிறது.
தாய்மையுற்ற ஒரு பெண் தான் பெற்றெடுத்த சிசுவைத் தொட்டுப் பார்த்து மகிழும்போது, கர்ப்பக் காலத்தில் அனுபவித்த அத்தனைச் சிரமங்களையும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மறந்து போய்விடும். அந்தப் பிஞ்சுக் கால்களைத் தொட்டுப் பார்க்கும்பொழுது, அந்தப் பிஞ்சு விரல்களைத் தடவிப் பார்க்கும்பொழுது அவள் அடையும் ஆனத்திற்கு எல்லையே இல்லை. அவள் மட்டுமல்ல – அவளது குடும்பம் – குடும்பத்தார் என அனைவரின் இயதங்களிலும் அந்த சிசுவின் உருவம் பதிந்து விடுகின்றது. இறைவன் தந்த பரிசு அல்லவா இந்தச் சிசு!
இதுவெல்லாமே கர்ப்பணிப் பெண்களுக்கு ஒரு தனி அழகையே இந்த 9 முதல் 10 மாதங்கள் பெண் மக்கள் அனுபவிப்பார்கள். தற்போதுள்ள நவீனக் காலக்கட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் ஒருசில பெண்கள் தங்களை அதிகளவு அழகுப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால், கர்ப்பமாக இருக்கும் காலக்கட்டத்தில் தன்னை அழக்குப் படுத்திக்கொள்ளும் விசயங்களில் கர்ப்பதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். .
கர்ப்பிணிகளுக்கு முதல் 3 மாதங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. இந்தக் காலக் கட்டத்தில்தான் கரு உருவாகி கருப்பையில் நிலைக்கும் காலம். இந்தக் காலத்தில் ஏற்படும் பல உடல்நலக் குறைவுகள் சற்று அகெளரியத்தைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால் இது ஒருசில பெண்களுக்கு இது வெவ்வேறான உணர்வுகளைக் கொடுக்கலாம்.
பொதுவாக, வாந்தியினால் திடமான உணவுகளை உண்ணவேப் பிடிக்காது. சாப்பிட விருப்பம் இருந்தாலும் கூட, வாய்க்குப் பிடிக்காது. ஆனால் அதற்காகச் சாப்பிடாமலும் இருக்க முடியாது அல்லவா? வாந்தி வரும்போது சாப்பிடாமல், சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது உண்ண வேண்டும். அதுவும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய உணவுகளையேச் சாப்பிட வேண்டும். குறுகிய இடைவேளையில் பழங்கள், காய்கறிகள், சால்ட், சத்து மிக்க பானங்கள் என்று சாப்பிடும்போது, ஓரிரு வாரங்களில், அடிக்கடி வாந்தி வந்தாலும்கூட, உடலுக்குத் தேவையான சத்துக்களை உடல் எடுத்துக் கொள்ளும்.
அதேபோல், முதல் மூன்று மாதங்களில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். சீறுநீர்ப் பாதை, நோய்த் தொற்று, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை வரவிடாமல் தவிர்ப்பது மிக முக்கியம். கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற பெயர் கொண்ட ஹார்மோன்கள் அளவு அதிகமாக சுரக்கும் என்பதால், உடலளவில் சற்று மாற்றத்தையும் காணலாம். இது மூன்றாவது மாதத்திலேயே உடலில் பதவிதமான புதியத் தோற்றங்கள் தோன்றிவிடும்.
இதுபோன்ற பலவிதமாக உபாதைகள் – சிரமங்களைத் தாண்டி பிரசவக் காலத்தில் அவர் துடிக்கும் துடிப்பின் வலிக்கு உலகத்தில் வேறு எந்த வலியுமே இல்லை என்றும்கூட சொல்லலாம். மூன்றாவது மாதத்தில்யே உடலில் பலவிதமான புதிய தோற்றங்களையும் காணலாம். தாய்மை என்பது பெண்களின் வாழ்வில் மிகவும் காலக்கட்டம்.
பிரசவம் நெடுங்கும் காலங்களில் அதாவது 7 அல்லது 8 மாதங்களில் மல்லாந்து படுபப்தை தவிர்க்கலாம். காரணம், தாயிடமிருந்து குழந்தைக்கு இரத்தம் எடுத்துச் செல்கின்ற இரத்த நாளங்கள், இதனால் அழுத்தப்படும். எனவே பிரசவம் நெருடங்கில் காலங்களில் இதனைத் தவிர்க்கலாம்.
காற்று நீர் மூலமாக நோய்க்கிருமிகள் அதிக அளவில் பரவும் வாய்ப்பும் உண்டு. பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதிய அளவு நீர் சத்து மற்றும் தொற்று நோய் அணுகாத வகையில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். செல்லப் பிராணிகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். அது கர்ப்பக் காலத்தில் இருக்கும் குழந்தைகயின் வளர்ச்சிக்கு கெடுதல் ஆகும். வைரல் கிருமியால் அலர்ஜி, எரிச்சல் காய்ச்சல் கூட வருவதற்கு வாய்ப்புண்டு. வலாம். மனதையும் உடலையும் தேவையில்லாமல் வருத்திக் கொள்ளக் கூடாது.
முடிந்தவரை மெல்லமாக நடை பழகுவது மிகவும் அவசியமாகும். இதனையெல்லாம் விட சில சமயங்களில் இறைவனின் அருளால் இரட்டை குழந்தைகள் – மூன்று குழந்தைகள் என்று பிறக்கும்போது, அந்த வீட்டில் ஆனந்தம் துள்ளி விளையாடும். குழந்தைகள் ஒரே நேரத்தில் அழும்போதும், சிரிக்கும் பொழுதும் அவளின் அந்தக் குடும்பத்தாரின் மகிழ்ச்சி எல்லையைத் கூட தாண்டிவிடும்.
எனவே, பெண்கள் தாய்மையுற்றிருக்கும்போது, அவளுடன் இருக்கும் குடும்பத்தார்கள் அவளின் தேவைகளையும், அவளது பகிர்வுகளையும் அமைதியுடன் – அக்கறையுடன் கேட்டுக் கொள்வதின் வழி மனமகிழ்வுடன் குழந்தையைச் சுமக்கும் காலத்தை எண்ணி மகிழ்வாள். எனவே, இந்த மகிழ்வான காலக்கட்டத்தில், கர்ப்பமுற்றிருக்கும் பெண்களை கவனமுடன் – அன்புடன் – பண்புடன் – பாசத்துடன் நடத்த வேண்டியது வீட்டில் மூத்தவர்களாக இருக்கும் பெண்களின் கடமையாகும். இதுவே அவர்களின் பெண்ணியம்!
www.myvelicham.com