ஜோகூர் போலீசார் RM 1.29 மில்லியன் பிட்காயின் சுரங்க சிண்டிகேட்டை கண்டுப்பிடித்தனர்.

Johor Police unearthed a Bitcoin mining syndicate of RM1.29 million.

ஜோகூர் போலீசார் RM 1.29 மில்லியன் பிட்காயின் சுரங்க சிண்டிகேட்டை கண்டுப்பிடித்தனர்.
ஜோகூர் போலீசார் RM 1.29 மில்லியன் பிட்காயின் சுரங்க சிண்டிகேட்டை கண்டுப்பிடித்தனர்.

Date : 28 April 2025 News By: Ganapathy 

பெட்டாலிங் ஜெயா ஜோகூர் போலீசார் RM 1.29 மில்லியன் பிட்காயின் சுரங்க சிண்டிகேட்டை கண்டுப்பிடித்தனர். 

மாநிலம் முழுவதும் சட்டவிரோத டிஜிட்டல் பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக பெரிய அளவிலான மின்சார திருட்டில் ஈடுபட்ட 40 முதல் 48 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் உள்ளடக்கிய ஒரு சிண்டிகேட்டை ஜோகூர் போலீசார் கண்டுப்பிடித்துள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.  

இந்நடவடிக்கையை தெனாகா நேஷனல் பெர்ஹாட்-உடன் இணைந்து குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்டதாகவும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 217,500 மதிப்புள்ள 87 பிட்காயின் சுங்க இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட மடிக் கணினி, கை தொலைபேசிகள், திசை விசைகள் மற்றும் சாவிகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.

மின்சார உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதற்காக சட்டம் 1990இன் பிரிவு 37(1) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. Thank you Malaymail 

www.myvelicham.com